ஆந்திராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அனக்காப்பள்ளி மாவட்டம், கொத்தஊர் பகுதியில் உள்ள ஆலையில், பட்டாசு தயாரிப்பின்போது விபத்து ஏற்பட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளநிலையில், வடகிழக்கு மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என காங். தரப்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்
- தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம்
- காங். மாநில செயலாளர் ஷெரீப்-க்கு, செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்
- "ஒற்றுமையாக இருக்கும் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் நோக்கத்தோடு உள்ள போஸ்டர்" என கண்டனம்
பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக நிர்வாகி சைதை துரைசாமி சந்திப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மகேஷ் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தொடர் விடுமுறை காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.