உங்களுக்கு எத்தனை மனைவிகள்? டிரம்ப்-சிரிய அதிபர் சந்திப்பில் நகைச்சுவை தருணங்கள்... வைரலான வீடியோ
80 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு செல்லும் முதல் சிரிய அதிபர் அல்-ஷரா ஆவார்.
அவரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் வரவேற்றார். இந்த சந்திப்பின்போது, நகைச்சுவையான சில விசயங்கள் நடந்தன. டிரம்ப், வாசனை திரவியம் அடைக்கப்பட்ட பாட்டில் ஒன்றை ஷராவிடம் கொடுத்து விட்டு, இது ஆண்களுக்கான நறுமண திரவியம் என்றார்.
15,16-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு; 4.80 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு தாள் -1 தேர்வும் பி.எட். முடித்த பட்டதாரிகளுக்கு தாள்-2. தேர்வும் நடத்த அறிவிக்கப்பட்டது. தொடக்கப்பள்ளி, நடு நிலைப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளிகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. நவம்பர் 1 மற்றும் 2-ந்தேதி நடை பெறுவதாக இத்தேர்வு அறிவிக்கப்பட்டது.
ஏஐ-ஐ திருமணம் செய்து கொண்ட பெண்
ஜப்பான்: கனோ (32) என்ற பெண் 3 ஆண்டுகளாக காதலித்து வந்த மனிதரை பிரேக் அப் செய்துவிட்டு ChatGPT சாட்ஜிபிடி-க்குள் தான் உருவாக்கிய ஏஐ கதாபாத்திரத்தை, திருமணம் செய்து கொண்டார். ஏஆர் கண்ணாடிகளை அணிந்து Lune Klaus என்ற ஏஐ உடன் மோதிரங்களை மாற்றிக்கொள்ளும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.
3 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 3 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா, ஊராட்சிகள் 5ம் திருத்தச் சட்ட முன்வடிவு, தமிழ்நாடு தொழிற்கல்வி நிலையங்களில் சேர்க்கை திருத்தச் சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல - உமர் அப்துல்லா
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் போதாது. அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த மதமும் இதை அனுமதிக்காது. காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு நபரும் பயங்கரவாதியோ அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவரோ கிடையாது. காஷ்மீரிகளை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல என ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
தேவநாதனை உடனடியாக கைது செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனை உடனடியாக கைது செய்ய வேண்டும் போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் காலத்தை நீட்டிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது.
வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசைக் கண்டித்து போராட்டம்
வங்காளதேசத்தில் பள்ளிகளில் இசை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்தும் முடிவை ரத்து செய்த முகமது யூனுஸ் தலைமையிலான அரசைக் கண்டித்து அந்நாட்டில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒருபுறம் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபுறம் ஷேக் ஹசீனா மீதான குற்றவியல் வழக்குகளை கண்டித்து அவாமி லீக் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
சென்னையில் 9 இடங்களில் சார்ஜிங் நிலையம்
சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை ஏற்படுத்த தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் திட்டமிட்டுள்ளது.
பெசன்ட் நகர் கடற்கரை, அம்பத்தூர் மங்கள் ஏரி பூங்கா, தி.நகர் விளையாட்டு திடல், சோமசுந்தரம் பூங்கா வாகன நிறுத்துடம், செம்மொழி பூங்கா, மெரினா, அண்ணா நகர் போகன் வில்லா பூங்கா, நாகேஸ்வராவ் பூங்கா, அஷ்டலட்சுமி கோயில் வாகன நிறுத்தம் ஆகிய இடங்களில் அமைய உள்ளன.
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.2,400 உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.800 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.11,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.9 உயர்ந்த நிலையில், தற்போது கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.183க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் தங்கம் விலை இரண்டாவது முறை உயர்ந்துள்ளது.
நீதிபதி மீது ரவுடி கருக்கா வினோத் காலணி வீச முயற்சி
சென்னை 6-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மீது ரவுடி கருக்கா வினோத் காலணி வீச முயற்சி செய்தார். உடனே சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர் ரவுடி கருக்கா வினோத்தை தடுத்து நிறுத்தினர். கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததால் கருக்கா வினோத் ஆத்திரம் அடைந்ததாக கூறப்படுகிறது. தி.நகர் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஆஜரானபோது நீதிமன்றத்தில் அத்துமீறி உள்ளார்.