எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வெளியான முக்கிய தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று (13-11-2025): தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயார் செய்ய சுப்ரீம்கோர்ட்டு அனுமதி
மேகதாது அணை கட்ட தமிழ்நாடு கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும்நிலையில், அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்துள்ளது.
மேலும் மேகதாது அணை கட்டுமானத்திற்கு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா அனுமதி கோருவதை எதிர்த்து தமிழ்நாடு கூறும் அம்சங்கள் அனைத்தும் மிகவும் ஆரம்ப கட்டமானது. எனவே, திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய நீர் ஆணையத்திடம் வழங்கும் போது, தமிழ்நாடு அரசு, காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றிடம் கருத்து கேட்ட பிறகே முடிவு எடுக்க வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை வழங்கவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்பதை தெளிவுபடுத்துவதாக கூறிய நீதிமன்ற அமர்வு, மேகதாது தொடர்பாக தற்போது சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
நாய் கடித்து நெல்லை வாலிபர் பலி.. மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே நாய் கடித்த வாலிபர் உரிய சிகிச்சை பெறாததால் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாகிஸ்தான் - இலங்கை ஒருநாள் தொடர்: போட்டிகள் ஒத்திவைப்பு.. காரணம் என்ன..?
இந்த தொடரின் எஞ்சிய போட்டிகள் நடைபெறும் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி இன்று நடைபெற இருந்த 2-வது போட்டி நாளைக்கும் (14-ம் தேதி). 15-ம் தேதி நடைபெற இருந்த 3-வது மற்றும் கடைசி போட்டி 16-ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளன.
ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தம்; தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
கடந்த ஒரு வார காலமாக ஆம்னி பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படாததால் தமிழக பயணிகள் பிற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள இயலாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே, திமுக அரசின் போக்குவரத்துத்துறை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்வு ஏற்படுத்தி தமிழக மக்கள் தங்களது பயணத்தை மேற்கொள்ள வழிவகை காண வேண்டும் என்று வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்
திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று சிறப்பு நிகழ்ச்சியாக உலகம்மன் திருத்தேரில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வரும் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மகளிர் நலமே சமூக நலம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மருத்துவ சேவைத் திட்டத்தை பெண்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லி சதிகாரர்கள் கோவைக்கு வந்தார்களா? - என்.ஐ.ஏ.யிடம் விவரம் கேட்ட கோவை மாநகர காவல்துறை
டெல்லி கார் குண்டு வெடிப்புக்கு காரணமான சதிகாரர்கள் கோவைக்கு வந்தார்களா என வழக்கை விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகமையிடம் கோவை மாநகரக் காவல்துறை விவரம் கேட்டுள்ளது. 8 பேர் 4 நகரங்களில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டது புலனாய்வுத்துறை விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து சதிகாரர்களின் விவரம், அவர்களிடம் நடத்தப்படும் விசாரணை, கூட்டாளிகள் யாரேனும் கோவையில் உள்ளார்களா? உள்ளிட்டவை குறித்து காவல்துறை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
சுசீந்திரம் தாணுமாலய கோவில்: இடிந்து விழுந்த தெப்பக்குள சுவர்
நாகர்கோவில் சுசீந்திரம் தாணுமாலய கோவிலில் தூர்வாரும் பணி நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள தெப்பக்குளத்தின் சுவர் இடிந்து விழுந்தது.
தெப்பக்குளத்தை தூர்வார மண் எடுத்துவந்த நிலையில், சுற்றுசுவர் வலுவிழந்து காணப்பட்டது. மேலும் தொடர் கனமழையால் சுற்று சுவர் இடிந்து விழுந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.