7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தைரியம் இருந்தால் டிஎன்ஏ டெஸ்டுக்கு வாங்க"- மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஜாய் கிரிசில்டா அழைப்பு
தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்தார். மாநில மகளிர் ஆணையத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
சபரிமலை சீசன்: ஆந்திராவில் இருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கம்
சபரிமலை சீசனையொட்டி ஆந்திராவில் இருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை: மருத்துவ வாகனத்தை பார்வையிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெண்களுக்காக ரூ.1.10 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ ஊர்தியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ், டிஜிட்டல் மேம்மோகிராபி, இ.சி.ஜி. கருவி, செமி-ஆட்டோ அனலைசர் உட்பட பல வசதிகளுடன் இந்த ஊர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரூ.40 கோடி செலவில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி கார் குண்டுவெடிப்பு: கான்பூரில் மேலும் ஒரு டாக்டரை கைது செய்தது என்.ஐ.ஏ. சிறப்புக்குழு
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் மேலும் ஒரு டாக்டரை என்ஐஏ சிறப்புக்குழு கைது செய்துள்ளது.
குண்டுவெடிப்பு சம்பவத்தில் பெண் டாக்டர் உட்பட 6 பேர் கைதான நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர்களில் இருவர் துருக்கி சென்று திரும்பியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளநிலையில், கைதானவர்களின் வெளிநாட்டு தொடர்புகள் குறித்தும் சிறப்பு புலனாய்வுக்குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
ஊரக வேலை உறுதித் திட்டம்: ரூ.1251 கோடி பாக்கியை மக்களுக்கு உடனே தர வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
2025-26ஆம் ஆண்டில் இதுவரை முடிக்கப்பட்ட பணிகளுக்காக ரூ.977.48 கோடி பாக்கி வைக்கப் பட்டுள்ளது என அன்புமணி தெரிவித்துள்ளார்.
நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அந்த மெயிலில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. இந்த நிலையில், இந்த மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீரர்கள் ஆதிக்கம்
ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா, இப்ராகிம் ஜட்ரன், நியூசிலாந்தின் டேரில் மிட்செல், இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் முறையே முதல் 4 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.
ஆண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுமா? - தமிழக அரசு விளக்கம்
ஆணாக இருந்தால் மட்டும் போதும். தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1,000 தமிழக அரசு வழங்குகிறது என்று குறிப்பிட்டு ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
கடைசி டி20: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து
15.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் அடித்த நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.