இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-06-2025

Update:2025-06-16 09:44 IST
Live Updates - Page 3
2025-06-16 04:19 GMT

தியானம் செய்த ராஜேந்திர பாலாஜி

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வேண்டி ஸ்ரீவில்லிபுத்தூர் சரபேஸ்வரர் கோவிலில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நள்ளிரவில் தியானம் செய்து சிறப்பு பூஜையில் ஈடுபட்டார்.

2025-06-16 04:18 GMT

குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள சேர்வலாறு அணை இன்று காலை திறக்கப்பட உள்ளதால், அகஸ்தியர் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் இன்று சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதைபோல மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

2025-06-16 04:16 GMT

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து காலமானார்

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து, திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உடன் பணியாற்றிய இவர் அறிவியல், விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் 4 புத்தகங்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது கிடைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்