இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-10-2025

Update:2025-10-16 09:39 IST
Live Updates - Page 2
2025-10-16 07:47 GMT

மகளிர் உரிமைத்தொகை: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த 28 லட்சம் பேரில், தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2025-10-16 07:43 GMT

பாக்ஸ்கான் நிறுவனத்தின் ரூ.15,000 கோடி முதலீடு உறுதியானது -அமைச்சர் டிஆர்பி ராஜா

ஆந்திராவில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்வது குறித்த அதிமுகவின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முதலீடாக மாற்றும் ‘கன்வர்ஷன் ரேட்' 77 சதவீதம் ஆக உள்ளது. பக்கத்து மாநில முதலீடு குறித்து, நான் பேசவில்லை. அதில் உள்ள அரசியலும் உங்களுக்கு தெரியும். எந்த முதலீடுகள் எல்லாம் வேலைவாய்ப்பாக மாறுமோ, அதை மட்டும் தான் புரிந்துணர்வு ஒப்பந்தமாக தமிழ்நாடு அரசு கையெழுத்திடுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏ தங்கமணி கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “பாக்ஸ்கான் நிறுவனத்துடன் போட்டுள்ள ஒப்பந்தம் நிச்சயமாக வருகிறது; பாக்ஸ்கான் நிறுவனத்தின் ரூ.15,000 கோடி முதலீடு உறுதியானது. இதனை கொச்சைப்படுத்துவது பல ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் செயலாகும்” என்று கூறினார்.

2025-10-16 07:08 GMT

ஈரோடு: மேம்பாலம் அடியில் தூங்கிக் கொண்டிருந்த தம்பதியின் ஒன்றரை வயது பெண் குழந்தை கடத்தல்

ஈரோடு மாவட்டம் சித்தோடு மேம்பாலம் அடியில் தூங்கிக் கொண்டிருந்த தம்பதியின் ஒன்றரை வயது பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது.

கொசுவலையை அறுத்து குழந்தையை யாரோ தூக்கிச் சென்றுவிட்டதாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சித்தோடு காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

2025-10-16 06:47 GMT

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது

வடகிழக்கு பருவமழைதென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து இன்று (வியாழக்கிழமை) விலகுகிறது என்றும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா-மாஹி, தெற்கு உள் கர்நாடகம், ராயல்சீமா, தெற்கு கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் தென் மேற்கு பருவமழை விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வடகிழக்கு பருவமழையால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இயல்பை விட மழை சற்று குறைவாகவும், வட மாவட்டங்களில் இயல்பை விட மழை சற்று அதிகமாகவும் பெய்யக்கூடும்  என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-10-16 06:30 GMT

கவர்னர் பரிந்துரைகளை நிராகரிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

கவர்னர் பரிந்துரைகளை நிராகரிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மசோதாக்கள் மீது திருத்தங்கள் கொடுக்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும், கவர்னருக்கு அதிகாரம் இல்லாததால் அவரது பரிந்துரைகளை நிராகரிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார் 

2025-10-16 06:27 GMT

கிட்னி திருட்டு புகாரில் பாரபட்சமின்றி நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


கிட்னி திருட்டு புகார் தொடர்பாக சட்டசபையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.


2025-10-16 06:20 GMT

எதிரிகளும் போற்றிய வீரம்...இதுவே கட்டபொம்மன் வாழ்க்கை சொல்லும் பாடம்: உதயநிதி ஸ்டாலின்


பார்போற்றும் வீரவரலாறு படைத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்



2025-10-16 06:18 GMT

திருவண்ணாமலை கோவிலில் நடிகர் ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி சாமி தரிசனம்


ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள "டீசல்" படம் நாளை வெளியாக உள்ளது.


2025-10-16 06:17 GMT

’கோபம் வராத அளவுக்கு நடந்துகொள்ளக்கூடியவர்..’ - நயினாருக்கு மு.க.ஸ்டாலின் திடீர் புகழாரம்


நயினார் நாகேந்திரனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


2025-10-16 06:14 GMT

அரசியல் பாகுபாடு இன்றி பலர் என்னிடம் நலம் விசாரித்தனர்.. ஒரு கட்சியை தவிர - ராமதாஸ்

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “மருத்துவமனையில் ஐசியு வார்டுக்கு நான் செல்லவில்லை. இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர். இனி தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்திப்பேன்

நான் மருத்துவமனையில் இருந்தபோது அனைத்து அரசியல் கட்சியினரும் நேரிலும், தொலைபேசியிலும் நலம் விசாரித்தனர். ஒரு கட்சி மட்டும்தான் நலம் விசாரிக்கவில்லை. அது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி” என்று அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்