இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-11-2025

Update:2025-11-16 09:16 IST
Live Updates - Page 2
2025-11-16 09:15 GMT

மயிலாடுதுறை காவிரி கரையில் எழுந்தருளிய சுவாமிகள்

துலா உற்சவ கடைமுக தீர்த்தவாரிக்காக மயிலாடுதுறை காவிரி கரையில் எழுந்தருளிய மாயூரநாதர், ஐயாரப்பர், வதன்யேஸ்வரர், விஸ்வநாதர் சுவாமிகள். திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீன கர்த்தர்கள் பங்கேற்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

2025-11-16 09:02 GMT

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 93 ரன்களில் ஆல் அவுட் ஆகி இந்தியா தோல்வியை தழுவியது.

2025-11-16 08:23 GMT

சென்னையில் நாளை நடைபெறவிருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு


சென்னையில் நாளை நடைபெறவிருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2025-11-16 08:10 GMT

விவசாயிகளுக்கு அசத்தல் அறிவிப்பு... சம்பா பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு


பல மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக குறுவை நெல் அறுவடை மற்றும் சம்பா நெல் நடவு பணிகள் தாமதமானதாலும், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதால் அடங்கல் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாலும், சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க, விடுபட்ட அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கிணங்க சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.


2025-11-16 08:08 GMT

உலகக் கோப்பை செஸ்: இந்திய வீரர் காலிறுதிக்கு முன்னேற்றம் 


11-வது உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் 5-வது சுற்றின் 2-வது ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி, முன்னாள் சாம்பியனான லெவோன் அரோனியனை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.

2025-11-16 07:41 GMT

இன்று மிக கன மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று (16-11-2025) மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை (17-11-2025) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலிலும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2025-11-16 07:33 GMT

அநீதிகளுக்கு எதிராக ஊடகங்கள் கிளர்ந்தெழ வேண்டும் - அன்புமணி ராமதாஸ் 


தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு அன்புமணி ராமதாஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2025-11-16 07:32 GMT

சிறை நிரப்பும் போராட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்: அன்புமணி ராமதாஸ்


சமூகநீதியின் சாபம்தான் தமிழ்நாட்டின் இன்றைய ஆட்சியாளர்கள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

2025-11-16 07:30 GMT

அத்தியாவசிய விவசாயப் பொருட்கள் மீதான பரஸ்பர வரி ரத்து செய்தார் டிரம்ப் 


வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் அத்தியாவசிய விவசாய பொருட்கள் மீதான பரஸ்பர வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

2025-11-16 07:29 GMT

நீலகிரியில் அறிமுகமாகும் 'கருப்பு கேரட்' - சோதனை முறையில் சாகுபடி


நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள நர்சரியில் தோட்டக்கலைத்துறை சார்பில் முதன் முறையாக கருப்பு கேரட் உற்பத்திக்கான சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்கான விதைகள் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டன. நர்சரியில் அந்த விதைகள் விதைக்கப்பட்டன.


Tags:    

மேலும் செய்திகள்