அன்னதான திட்டத்தை உதயநிதி தொடங்கி வைத்தார்
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அன்னதான திட்டத்தை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சனி, முக்கிய திருவிழா நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்து பக்தர்களுடன் உணவருந்தினார் துணை முதல்-அமைச்சர் உதயநிதி.
'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பாக 7 குழுக்களை அமைத்து மத்திய அரசு
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க, காங்கிரசின் சசி தரூர், பாஜகவின் ரவிசங்கர், திமுகவின் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சூலே உள்ளிட்டோர் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 7 குழுக்களும் விரைவில் சர்வதேச சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது, விரைவில் சரியாகும் - ஜி.கே. மணி
பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது. கட்சிக்குள் சலசலப்பு வருவது இயல்புதான். இது விரைவில் சரியாகும். ஊடகங்கள் இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
பீகார் கயா நகரின் பெயரை கயாஜி என மாற்ற முடிவு
பீகார் புத்த மதத்தின் புனித தலமான கயா நகரின் பெயரை கயாஜி என மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்மீக அடையாளத்தை காப்பாற்றும் முயற்சியாக பெயர் மாற்றம் செய்ய பீகார் மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெண்களுக்காக பொருளாதார புரட்சி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பெண்களுக்காக ஒரு பொருளாதார புரட்சியே தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. 700 கோடி பயணங்களை மகளிர் விடியல் பயணம் நெருங்குகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1.15 கோடி பேர் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ரஷியா - உக்ரைன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன்-ரஷியா இடையே துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்ர்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலா 1000 போர்க் கைதிகளை பரிமாறிக் கொள்ள ரஷியா-உக்ரைன் ஒப்புதல் வழங்கி உள்ளது.
சென்னையில் தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் ரூ.8,720க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.69,760க்கும் விற்பனை ஆகிறது.
பாக். விமானப்படை தளம் மீது தாக்குதல்: ஷெபாஸ் ஷெரீப்
பாக். விமானப்படை தளம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டுள்ளார். இஸ்லாமாபாத்தில் நடந்த நிகழ்வில் இந்தியாவின் தாக்குதல் குறித்து பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசி உள்ளார்.
தமிழகத்தில் 20ஆம் தேதி வரை கிருஷ்ணகிரி,தர்மபுரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ருமேனியாவில் நடைபெற்ற சூப்பர்பெட் கிளாசிக்கல் செஸ் தொடரில் டைபிரேக்கரில் வென்று மகுடம் சூடினார் பிரக்ஞானந்தா.