மெட்ரோ ரெயில் பால விபத்து - விசாரணை அறிக்கை தாக்கல்
மெட்ரோ ரெயில் பாலம் இடிந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் - மெட்ரோ அதிகாரிகள் குழுவினரின் விசாரணை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதுவரை மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் குழுவினர் 23 பேரிடம் விசாரணை நடத்தினர். 90 சதவீத விசாரணை நிறைவு பெற்றது.
இங்கிலாந்தின் உளவு அமைப்புக்கு முதல்முறையாக பெண் தலைவர் நியமனம்
எம்I6 எனப்படும் இங்கிலாந்தின் உளவு அமைப்பின் தலைவராக பெண் ஒருவர் முதல் முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவு அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவராக உள்ள பிளேசி மெட்ரவெலி எம்I6 தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். எம்I6 உளவு அமைப்பின் 118 ஆண்டு வரலாற்றில், பெண் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
பிரதமர் மோடியின் காலில் விழுந்த சைப்ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்
நிகோசியா வரலாற்று மையத்திற்கு பிரதமர் மோடி வந்தபோது, சைப்ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேலா கைத்ரியோட்டி மலாபா திடீரென பிரதமர் மோடி காலில் விழுந்து வணங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
அவலாஞ்சியில் 21 செ.மீ மழை பதிவு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 21 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. 4 நாட்களுக்குப் பின் மழையின் தாக்கம் இன்று சற்று குறைந்துள்ளதால் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படுகின்றன.