இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 17 Jun 2025 7:14 PM IST
- ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை நிறைவு
- சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு
- திருவாலங்காடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்ற நிலையில் நிறைவு
- ஏடிஜிபி ஜெயராமிடம் 24 மணி நேரம் நடைபெற்ற விசாரணை
- 17 Jun 2025 7:07 PM IST
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை - தேவாலய ஊழியர் கைது
பிரார்த்தனைக்கு வந்த சிறுவர்களிடம் நட்பாக பழகி பாலியல் தொல்லை
போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை
3 தனிப்படை அமைத்து ஏசுதாஸை போலீசார் தேடி வந்த நிலையில், அதிரடி கைது
- 17 Jun 2025 6:08 PM IST
திருப்பூர் பல்லடம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி சாலையில் நின்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கன்டெய்னர் லாரிக்கு அடியில் சிக்கி உள்ள உடல்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
- 17 Jun 2025 5:36 PM IST
சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒவ்வொரு வகுப்புக்கான விகிதாசார பிரதிநிதித்துவ ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். இது சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
- 17 Jun 2025 4:59 PM IST
தென்காசி, சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள முதியோர் காப்பகத்தில் கடந்த வாரம் உணவு ஒவ்வாமையால் 4 பேர் ஏற்கனவே உயிரிழந்து இருந்தனர். இந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேலும் 11 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
- 17 Jun 2025 4:30 PM IST
மதுரை எய்ம்ஸ் காணொலி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
மதுரைக்கு வந்த மத்திய உள்துறை மந்திரி எய்ம்ஸ் என்ன ஆனது எனச் சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன். அதற்குப் பதிலாக, இந்தக் கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள். 2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா? இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
- 17 Jun 2025 4:22 PM IST
ஆமதாபாத்-லண்டன் இடையேயான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான விபத்துக்கு பிறகு முதல் முறையாக சேவையை அறிவித்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் இருந்து பாரீஸ் செல்லும் ஏர் இந்தியா விமானமும் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது. விமானம் புறப்படுவதற்கு முன்பு நடந்த ஆய்வின்போது, தொழில் நுட்ப கோளாறு ஒன்று கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்தே, இந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.
- 17 Jun 2025 2:41 PM IST
தமிழ்நாடு எங்கே போகிறது? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
கடலூரில் 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு எங்கே போகிறது? என்று தெரியாத நிலையிலேயே உள்ளது. போதைப்பொருளை ஒழித்து சட்டம் ஒழுங்கை திமுக அரசு காக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை. காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- 17 Jun 2025 2:15 PM IST
துபாயில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை
கோடை காலத்தை முன்னிட்டு, துபாயில் ஜூலை 1 முதல் செப்டம்பர் 12ம் தேதி வரை, வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 3 நாட்கள் விடுமுறை என்று தெரிவித்துள்ளது. 2 வாரத்தில் 5 நாட்கள் வேலை செய்பவர்களின் பணி நேரத்தை 7 மணி நேரமாக குறைத்துள்ளது.