மத்திய மந்திரி நிதின் கட்கரி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
ரூ.3,000 மதிப்பிலான வருடாந்திர (FasTag) பாஸ் டேக் பாஸ் சேவை ஆகஸ்ட் 15 முதல் அறிமுகம் செய்யப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இந்த பாஸ் மூலம், ஓராண்டுக்கோ அல்லது 200 பயணங்களுக்கோ சுங்கக் கட்டணம் தனியாக செலுத்தாமல் பயணிக்கலாம்; இந்த பாஸ் வணிக பயன்பாடற்ற தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது
அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களின் 202 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் வெற்றிகரமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சங்வி தகவல் தெரிவித்துள்ளார்.
பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி மருத்துவமனையில் அனுமதி
பாட்டாளி மக்கள் கட்சித் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . ஏற்கெனவே சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள், நெஞ்சுவலியால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாகனத்தில் இருந்து தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு
சென்னை பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் பின்னால் வந்த லாரி மோதி 9 வயது சிறுமி உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்குச் சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாணவி மரணம் - பள்ளி ஆசிரியை இடமாற்றம்
கடலூர் கீழ்அழிஞ்சபட்டு அரசுப் பள்ளியில் மயங்கி விழுந்த 2ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். மயங்கி விழுந்த மாணவிக்கு உடனே சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்காத புகாரில் ஆசிரியை ரேவதி பணியிடமாற்றம்
திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது - வைகைச்செல்வன் பேட்டி
காஞ்சிபுரத்தில் அதிமுக ஆர்பாட்டத்தில் பங்கேற்ற வைகைச்செல்வன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது என்பதே திருமாவளவனை சந்தித்தற்கான பதில். அடுத்த கட்டத்தை போக போக பார்ப்பீர்கள். அதிமுக கூட்டணி நாளுக்குநாள் வளர்ச்சி பெறும், பலர் வர உள்ளனர் என்றார்.
50 முறை மட்டுமே பார்க்க முடியும்
வங்கிக் கணக்கின் இருப்புத் தொகையை UPI - (Gpay, PhonePe, Paytm) யுபிஐ மூலம் ஜிபே,போன்பே. பேடிம் மூலம் இனி ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பார்க்க முடியும். நெட்வொர்க்கில் தேவையற்ற சுமை ஏற்படுத்துவதை தவிர்க்க இம்முடிவு என NPCI என்.பி.சி.ஐ தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை
மனுக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதால் பொது நல வழக்குகள் அதிகரித்துள்ளது. அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இந்திய அணியில் சேர்க்கப்பட்ட ஹர்ஷித் ரானா
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் 19வது வீரராக சேர்க்கப்பட்டுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா. நாளை மறுநாள் லீட்ஸ் மைதானத்தில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் பைக் டாக்சி சேவையைத் தொடர்ந்த 103 பைக்குகள் பறிமுதல்
கர்நாடகாவில் பைக் டாக்சி தடை அமலுக்கு வந்த பின், சேவையைத் தொடர்ந்த 103 ஓட்டுநர்களின் பைக்குகளை பறிமுதல் செய்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.