இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025

Update:2025-10-18 09:36 IST
Live Updates - Page 5
2025-10-18 05:15 GMT

ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல்: பாகிஸ்தானுக்கு ரஷித் கான் கண்டனம்


ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

2025-10-18 05:14 GMT

‘ரஷியாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது’ - டிரம்ப் மீண்டும் பேச்சு


உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


2025-10-18 05:12 GMT

பஞ்சாப்: பயணிகள் ரெயிலில் பயங்கர தீ விபத்து


ரெயிலின் 3 பெட்டிகளில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை.


2025-10-18 04:48 GMT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி: தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்


விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் 7 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்புகின்றனர்.


2025-10-18 04:47 GMT

பாகிஸ்தான் தாக்குதல் எதிரொலி: முத்தரப்பு டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் விலகல்


பாகிஸ்தானுடன் எல்லையில் மோதல் நடந்து வரும் நிலையில், முத்தரப்பு டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி விலகி உள்ளது.

வரும் நவ.17ம் தேதி தொடங்கும் இத்தொடரில், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

2025-10-18 04:43 GMT

பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இடஒதுக்கீடு கேட்டு தெலுங்கானா மாநிலம் முழுவதும் பந்த்

தெலுங்கானாவில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி மாநிலம் முழுவதும் பந்த் நடைபெற்று வருகிறது.

முன்னதாக இடஒதுக்கீட்டை தேர்தல் வாக்குறுதியாக நிறைவேற்றுவதாக அரசு கடந்த செப்டம்பர் 26ம் தேதி அரசாணை வெளியிட்ட நிலையில், அக். 9ம் தேதி தெலுங்கானா ஐகோர்ட்டு அதற்கு இடைக்காலத் தடை விதித்தது.

2025-10-18 04:33 GMT

அமெரிக்கா: நெடுஞ்சாலை அருகே விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் - 3 பேர் உயிரிழப்பு


விமானம் தீப்பிடித்து எரிந்ததால் அதில் பயணம் செய்த 3 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.


2025-10-18 04:32 GMT

ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி


ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.


2025-10-18 04:30 GMT

‘பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது’ - ராகுல் காந்தி குற்றச்சாட்டு


தலித் மக்கள் மீதான அடக்குமுறை உச்சத்தில் இருக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


2025-10-18 04:29 GMT

தீபாவளியை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் அரசு பஸ்களில் 3 லட்சம் பேர் பயணம்


தீபாவளியை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் அரசு பஸ்களில் 3 லட்சம் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித் துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்