இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 18 Oct 2025 8:04 PM IST
முதல்-அமைச்சர், பேரவைத் தலைவர் எவருக்கும் வானளாவிய அதிகாரம் கிடையாது - அன்புமணி ராமதாஸ்
இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் முதல்-அமைச்சர், பேரவைத் தலைவர் போன்ற எவருக்கும் வானளாவிய அதிகாரம் கிடையாது; அவை அனைத்தும் கற்பனை தான். இங்கு ஜனநாயகம் தான் அனைத்துக்கும் அடிப்படை என்பதை பேரவைத் தலைவர் உணர்ந்து கொள்ள வேண்டும்; அதன்படியான நிர்வாகிகள் தேர்வை மதிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
- 18 Oct 2025 8:02 PM IST
தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும் (Green Line) நீல வழித்தடத்திலும் (Blue Line) தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான ரெயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம்.
காலை 6:30 மணிக்குப் பிறகு, மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம் போல் எவ்வித மாற்றமுமின்றி இயங்கும். இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
- 18 Oct 2025 7:57 PM IST
இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. மேலும், அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல், வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகை, ராணிப்பேட்டை, விழுப்புரம், தென்காசி, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 18 Oct 2025 7:54 PM IST
தலைக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பெண் தளபதி போலீசில் சரண்
சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
- 18 Oct 2025 5:56 PM IST
சளிக்கு சொட்டு மருந்து குடித்த குழந்தை உயிரிழப்பு: தடை செய்யப்பட்ட மருந்து காரணமா?
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் கருங்கல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு சளி பிரச்சினை இருந்துள்ளது. உடனே, குழந்தையின் பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.
குழந்தைக்கு சளி குறைய பணியில் இருந்த டாக்டர் சொட்டு மருந்து ஒன்று கொடுத்துள்ளார். பெற்றோரும் அந்த மருந்தை குழந்தைக்கு கொடுத்துள்ளனர். ஆனால், மருந்தை குடித்த குழந்தை சற்று நேரத்தில் துடிதுடித்து இறந்து போனது.
- 18 Oct 2025 5:39 PM IST
ஒரே முகவரியில் சமந்தா, தமன்னா...பரபரப்பை கிளப்பிய வாக்காளர் பட்டியல்
சமந்தா தமன்னா உள்ளிட்ட நடிகைகள் ஒரே முகவரியில் வசிப்பது போன்ற போலி வாக்காளர் பட்டியல் வெளியாகி சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.
- 18 Oct 2025 5:34 PM IST
டெல்லி: எம்.பி.க்களுக்கான குடியிருப்பில் திடீர் தீ விபத்து
டெல்லியில் பீஷாம்பார் தாஸ் மார்க் பகுதியில் பிரம்மபுத்திரா என்ற பெயரில் எம்.பி.க்களுக்கான குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. நாடாளுமன்ற மேலவையின் எம்.பி.க்கள் வசிக்க கூடிய இந்த கட்டிடத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கட்டிடம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
- 18 Oct 2025 5:26 PM IST
24 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரியலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், ராணிப்பேட்டை, சேலம், திருச்சி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 18 Oct 2025 5:14 PM IST
’அதனால்தான் என் பெயரை மாற்றினேன்’ - கியாரா அத்வானி
கியாரா அத்வானியின் உண்மையான பெயர் ஆலியா அத்வானி ஆகும். தற்போது கியாரா, யாஷுடன் டாக்சிக் படத்தில் நடித்துள்ளார்.
- 18 Oct 2025 4:54 PM IST
’கருப்பு’ - சூர்யா ரசிகர்களுக்கு சஸ்பென்ஸை எகிற வைத்த சாய் அபயங்கர்
நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு சஸ்பென்ஸை எகிற வைக்கும் விதமாக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ஒரு அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ’சரவெடி ஆயிரம் பத்தனுமா #கருப்பு’என்று பதிவிட்டுள்ளார்.
















