துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உடன் ஜெக்தீப் தன்கர் சந்திப்பு
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை முன்னாள் துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் இன்று சந்தித்தார். டெல்லியில் துணை ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்ட விவரம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
பைரசியால் திரைத்துறையை விட பொதுமக்களுக்குதான் பெரிய இழப்பு - இயக்குநர் ராஜமவுலி
பைரசி தளங்களில் மக்கள் படங்களை டவுன்லோடு செய்யும்போது அவர்கள் உங்களது தனிப்பட்ட தகவல்களை திருடி அதன்மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று ராஜமவுலி கூறியுள்ளார்.
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..?
திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர் தொடர்பாக ராகுல் காந்தி ஆலோசனை
எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
வாக்கு திருட்டு தொடர்பாக தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி கடும் விமர்சனங்களை முன்வைத்து இருந்தார். எஸ்.ஐ.ஆர் மூலமாக வாக்குரிமை பறிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆங்கிலத்தை எதிர்க்கவில்லை- பிரதமர் மோடி
`இந்திய அரசு ஆங்கிலத்தை எதிர்க்கவில்லை. இந்திய மொழிகளின் வளர்ச்சியை தான் நாங்கள் ஆதரிக்கிறோம். அடிமைத்தன மன நிலையில் இருந்து நம் சமூகத்தை விடுவிப்பது அவசியம் - பிரதமர் மோடி பேச்சு
சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் இன்று முதல் 25-ந்தேதி வரை செயல்படும்
சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்களில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காண சென்னையில் இன்று முதல் 25-ந்தேதி வரையில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மழை காரணமாக இன்றும், நாளையும் நடைபெற இருந்த கூட்டம் ஒத்திவைப்பு-பா.ம.க. அறிவிப்பு
சென்னை,
பா.ம.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
மழையின் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்த பா.ம.க., வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டமும், நாளை (புதன்கிழமை) நடைபெற இருந்த இளைஞர் சங்க மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கூட்டமும் ஒத்திவைக்கப்படுகிறது. மேற்படி 2 கூட்டங்கள் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி குண்டு வெடிப்பு - 25 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 25 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. உமர் பணியாற்றிய அல்-பலாஹ் பல்கலை.யின் நிதி பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அல்-பலாஹ் பல்கலை. அறங்காவலர்கள், நிர்வாகிகள் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. பல்கலைக்கழகத்தில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதா? என்பது குறித்து சோதனை நடைபெற்று வருகிறது.