இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-06-2025

Update:2025-06-19 09:36 IST
Live Updates - Page 4
2025-06-19 04:15 GMT

இன்று சற்று உயர்ந்த தங்கம் விலை

சென்னையில் ஆப்ரணத்தங்கம் விலை ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 74,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.15 அதிகரித்து கிராம் ரூ.9,265க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி கிராம் ரூ.122க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2025-06-19 04:11 GMT

3 லட்சத்தை கடந்த அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை

அரசு பள்ளிகளில் நிகழ்வாண்டுக்கான மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை கடந்தது. அதிகபட்சமாக சென்னையில் 17,985 பேர். குறைந்தபட்சமாக நீலகிரியில் 1,327 பேர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, சேலம், தென்காசி, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன. ஜூலை மாத இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-06-19 04:09 GMT

அகஸ்தியர் அருவியில் உள்ளூர் மக்கள் கட்டணமின்றி குளிக்க அனுமதி

நெல்லை: நீதிமன்ற உத்தரவுப்படி அகஸ்தியர் அருவியில் உள்ளூர் மக்கள் இன்று (ஜூன் 19) முதல் கட்டணமின்றி குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அம்பாசமுத்திரம் தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்கள் மட்டும் கட்டணமின்றி அகஸ்தியர் அருவிக்கு சென்று வர வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

2025-06-19 04:09 GMT

கர்நாடகாவில் தக் லைப் திரைப்படத்தை வெளியிடும்போது உரிய பாதுகாப்பு வழங்கப்படும் -கரநாடகா அரசு

கர்நாடகாவில் தக் லைப் திரைப்படத்தை வெளியிடும்போது உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என உறுதி அளித்துள்ளது. 

2025-06-19 04:08 GMT

சென்னையில் சரித்திர பதிவேட்டில் உள்ள 10 ரவுடிகள் கைது

சென்னை வியாசர்பாடி, செம்பியம், கொடுங்கையூர், திருவிக நகர், புளியந்தோப்பு காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சரித்திர பதிவேட்டில் உள்ள 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து, ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

2025-06-19 04:08 GMT

சேலத்தில் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம்

சேலத்தில் இன்று நடைபெற உள்ள பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பங்கேற்க உள்ள நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஜி.கே.மணி, அருள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இன்று அவர்கள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

அன்புமணியின் கூட்டங்களில் பங்கேற்கும் முக்கிய நிர்வாகிகளை ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கி வரும் நிலையில் பாமகவின் 2 முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்