அமித்ஷா பேச்சு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே கருத்து தெரிவித்துவிட்டார். அமித்ஷா விவகாரத்தில், ஜெயக்குமார் கூறிய கருத்தே எனது கருத்து என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக தலைவர் சி.டி.ரவி மீது தாக்குதல் முயற்சி. தரக்குறைவாக பேசிய சி.டி.ரவியை, பெண் மந்திரியின் ஆதரவாளர்கள் சட்டமன்ற வளாகத்திற்குள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மராட்டிய மாநிலம் மும்பையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை பாஜகவினர் சூறையாடியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. காங்கிரஸ் கட்சிதான் அம்பேத்கரை அவமதித்து விட்டதாக கூறி பாஜகவினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது காங்கிரஸ் அலுவலகத்தை பாஜகவினர் சூறையாடினர். அலுவலகத்தை சூறையாடிய பாஜகவினர் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியபோது காங்கிரஸ் அலுவலகம் சூறையாடப்பட்டதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
சென்னை, கிண்டி ராஜ்பவனில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு விழா நடத்தினார்.
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் விபத்து: 2 பேர் மாயம்
சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 2 பேர் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் - ராகுல்காந்தி வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி.யும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
அம்பேத்கரை அவதூறாக பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும். அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அதானி விவகாரம் குறித்து அவையில் விவாதிக்கக்கூடாது என பாஜக நினைக்கிறது. நாங்கள் சென்றபோது நாடாளுமன்ற வாயிலில் இருந்த பாஜகவினர் எங்களை அனுமதிக்கவில்லை என்றார்.
தொடர் விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும் என்று சிறைத்துறை விதிகளில் மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அவர் கூறும் குற்றச்சாட்டுகள் துளியும் உண்மையில்லை. பாஜக கூறும் குற்றச்சாட்டுகளுக்கு முதலில் ஆதாரம் வழங்க வேண்டும். அம்பேத்கரை அவமதித்து பேசியதால்தான் அமித் ஷாவை மன்னிப்பு கேட்கச் சொல்கிறோம். நாடாளுமன்ற வளாகத்தில் அமைதியான முறையில்தான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம், ஆனால் ராகுல் காந்தியின் நற்பெயரைக் கெடுக்க பாஜக சதி செய்கின்றனர். காங்கிரஸ் எம்.பி.க்களை நாடாளுமன்றத்திற்குள் நுழையவிடாமல் பாஜக எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தினர் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்த கருத்துக்கு பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ் கூறியுள்ளார்.