ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவப் திட்டத்தின் கீழ், இரண்டு கோடியாவது பயனாளியான நஞ்சனாபுரத்தைச் சேர்ந்த சுந்தராம்பாளின் இல்லத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்கி அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை பார்வையிட்டு, விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
ராகுல் காந்தி மீது 3 பாஜக எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தியதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், ராகுல் காந்தி மீதான அப்பட்டமான தாக்குதல் அவரது கண்ணியத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, நமது நாடாளுமன்றத்தின் ஜனநாயக உணர்வின் மீதான தாக்குதல். எங்களை நாடாளுமன்றத்திற்குள் நுழையவிடாமல் பாஜக எம்பிக்கள் தடுத்ததாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் வாரம் புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் ரூ.550 கோடி செலவில் புதிய பாம்பன் பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. ஹுப்ளி - ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் 2025 ஜனவரி 4-ம் தேதி முதல் இயக்கம் என அட்டவணை வெளியானதால் புதிய பாலம் திறக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஜனவரி முதல் வாரம் புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் ரூ.550 கோடி செலவில் புதிய பாம்பன் பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. ஹுப்ளி - ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் 2025 ஜனவரி 4-ம் தேதி முதல் இயக்கம் என அட்டவணை வெளியானதால் புதிய பாலம் திறக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
நெல்லை அருகே கேரள மருத்துவக்கழிவுகள் கொட்டிய விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமை ஏஜெண்டாக செயல்பட்ட சுத்தமல்லியை சேர்ந்த மனோகர், மாயாண்டி கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான இருவரிடம் நெல்லை எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளை திரையரங்குகளில் `விடுதலை-2' திரைப்படத்தின் சிறப்புக்காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. நாளை ஒருநாள் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை மொத்தமாக 5 காட்சிகளை திரையிட அனுமதி வழங்கி உள்ளது.
வேலூரில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த பெண்ணின் சடலத்தோடு துருகம் பகுதியில் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். துருகம் பேருந்து நிலையம் முன்பு ஆம்புலன்ஸை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என்று ஐசிசி தெரிவித்துள்ளது. 2024-2027-ம் ஆண்டு வரை இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் பொதுவான மைதானத்தில் நடைபெறும் என்றும் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி (59), 3 நாள் பயணமாக மொரிஷியஸுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் கருத்து அம்பேத்கரை அவமதிப்பதாக உள்ளது. அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.