4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
ஆயுத பூஜை விஜயதசமி விடுமுறை நாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனார். இலவச தரிசனத்தில் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ரஷியாவுக்கு அழுத்தம் - ஜி7 நாடுகள் முடிவு
ரஷியாவிடம் இருந்து எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு எதிராக வர்த்தக நடவடிக்கைளை எடுப்போம் என ஜி 7 நாடுகள் முடிவு எடுத்துள்ளது. உக்ரைன் போரை நிறுத்துவதற்கு ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட ஜி7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கார்கேவிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
“கார்கேவிடம் பேசினேன். அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன், விரைவில் அவர் குணமடைய வாழ்த்தினேன். அவரது தொடர்ச்சியான நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
நெல்லை - திருச்செந்தூர் இடையே இன்றும், நாளையும் சிறப்பு ரெயில் இயக்கம்
குலசேகரப்பட்டினம் தசரா விழாவுக்காக நெல்லை - திருச்செந்தூர் இடையே இன்றும் நாளையும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் நெல்லைக்கு இரவு 10.30 மணிக்கு வந்தடையும். மறுமார்க்கத்தில் நெல்லையில் இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் திருச்செந்தூருக்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியவாத சிந்தனையை அரசு விரும்பவில்லை - தமிழிசை சவுந்தரராஜன்
தேசியவாத சிந்தனை வளர்வதை அரசு விரும்பவில்லை என கைதின் மூலம் தெரிகிறது. போரூர் அருகே ஷாகா பயிற்சி செய்த ஆர்எஸ்எஸ் அமைப்பினரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடரும் - ராஜ்நாத் சிங்
குஜராத் எல்லையோரம் உள்ள 'சர் கிரிக்' சர்வதேச எல்லைக்கோடு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் தனது உள்கட்டமைப்பை அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ஏதேனும் அச்சுறுத்தலில் ஈடுபட முயன்றால், இந்தியா தீர்க்கமான பதிலடியை கொடுக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் கூறினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாற்றம்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
விஜயை நோக்கி செருப்பு வீசியது யார்? - EXCLUSIVE வீடியோ
கரூர் பிரசாரத்தில் விஜய்யை நோக்கி செருப்பு வீசும் பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது. விஜய் மீது செருப்பு, தண்ணீர் பாட்டில், தேங்காய் வீசும் காட்சிகள் வெளியாகி உள்ளன.கூட்டத்தை கலைத்து மயங்கியவர்களை மீட்கும் பரபரப்பு காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத விஜய் ரசிகர்களுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் எங்கே? - போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த் தலைமையிலான 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஆனந்த்-க்கு நெருக்கமான நிர்வாகிகளிடமும், சேலம் மாநகர், ஏற்காடு, கருமந்துறை பகுதியில் போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல், ஈரோடு, சென்னை மாவட்டங்களிலும் தனிப்படை தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
விஜயால் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது -திருமாவளவன்
ஆபத்தான அரசியலை கையில் எடுத்துள்ளார் தவெக தலைவர் விஜய். வெறுப்பு அரசியலை பேசி வரும் விஜயால் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.