இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 2-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 2 Oct 2025 3:59 PM IST
ஆயுதபூஜை கொண்டாடிய தவெக
பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுள்ளது. விஜயின் பிரசார வாகனத்துக்கு மாலை அணிவித்து கொண்டாடியுள்ளனர்.
- 2 Oct 2025 3:55 PM IST
காதி பொருட்களை வாங்க வேண்டும் - அமித்ஷா
ஒவ்வொரு குடும்பமும் வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.5,000 மதிப்புள்ள காதி பொருட்களை வாங்க வேண்டும். அது போர்வை, தலையணை உறை, துண்டு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி வாங்குவதன் மூலம், நீங்கள் ஒரு வேலைவாய்ப்பை உருவாக்குகின்றீர்கள் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
- 2 Oct 2025 3:48 PM IST
மறுஅறிவிப்பு வரும்வரை நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது - நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை
தவெக தலைமையின் மறு அறிவிப்பு வெளியாகும் வரை எந்த நிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது என தவெக மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை என தகவல் வெளியாகி உள்ளது. கரூர் கூட்ட நெரிசலைத் தொடர்ந்து தேர்தல் பிரசார பயணத்தை ஏற்கனவே ஒத்திவைத்த விஜய். கரூரில் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு கரூருக்கு பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- 2 Oct 2025 3:43 PM IST
கரூர் சம்பவம்: விஜய் இதயத்தில் வலி இல்லை; சீமான் பேட்டி
விஜய் வீடியோவை பார்க்கும்போது அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை; இருந்திருந்தால் அந்த மொழியில் அதனை வெளிப்படுத்தி இருப்பார் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
- 2 Oct 2025 3:40 PM IST
கிணற்றில் விழுந்து 54 மணி நேரமாக போராடிய பெண்
சீனாவில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த கின் என்ற பெண் சுமார் 54 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கின் காணாமல்போனதாக பெற்றோர் போலீசில் புகாரளிக்க நீண்ட நேரத்திற்கு பின் அவரின் அழுகை குரலை வைத்து கண்டறிந்துள்ளனர். கிணற்றுச் சுவரை பிடித்தபடியே கொசு கடி, தண்ணீர் பாம்பு கடிகளை தாண்டி அவர் உயிர் பிழைத்துள்ளார்.
- 2 Oct 2025 3:22 PM IST
கரூர் நெரிசல் - ஜெனரேட்டர் ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக மின் விளக்கு, ஜெனரேட்டர் ஏற்பாட்டாளர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெனரேட்டர், மின் விளக்குகளுக்கு கே.ஆர்.நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது; ஒப்பந்ததாரர், ஜெனரேட்டரை ஆஃப் செய்தவரிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்ற காவல் துறையினர்; கூட்டம் அதிகரித்தது எப்போது? தடுப்புகளை உடைத்துக் கொண்டு வந்தது யார் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 Oct 2025 2:18 PM IST
வரும் 7ம் தேதி சென்னை உட்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
ராணிப்பேட்டை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் வரும் 4ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (அக்.02) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
- 2 Oct 2025 1:54 PM IST
’அகண்டா-2’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது
நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் அகண்டா -2 திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


















