இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-04-2025

Update:2025-04-20 09:17 IST
Live Updates - Page 3
2025-04-20 06:29 GMT

“கள்ளழகர் திருவிழாவுக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில், பாலப் பணிகளின் கட்டுமானப் பொருட்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளேன்” என மதுரையில் ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

2025-04-20 05:50 GMT

மதுரை சித்திரைத் திருவிழா முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆழ்வார்புரம் பகுதியில் அமைச்சர்கள் சேகர் பாபு, எ.வ.வேலு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆய்வு மேற்கொண்டனர். சித்திரைத் திருவிழா ஏப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மே 8ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு மே 12ம் தேதி நடைபெறுகிறது.

2025-04-20 04:58 GMT

மதிமுக முதன்மைச் செயலர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ள சூழலில், மதிமுக நிர்வாகக்குழு கூடியுள்ளது.

2025-04-20 04:55 GMT

மதிமுகவில் மல்லை சத்யா மட்டுமல்ல, அனைவருமே சேனாதிபதிதான். மதிமுகவுக்காக, வைகோவுக்காக உழைத்தவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். பிறருக்கு வழங்கிய வாய்ப்பை விட மல்லை சத்யாவிற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டன என்று துரை வைகோ கூறியுள்ளார்.

2025-04-20 04:03 GMT

சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2025-04-20 03:49 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் மகேஷ் குமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சிறுமியின் பாட்டி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2025-04-20 03:49 GMT

தொடர் விடுமுறை தினத்தை ஒட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் - நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

2025-04-20 03:49 GMT

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அமெரிக்கா சென்றடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

2025-04-20 03:48 GMT

டெல்லி முஸ்தாபா பாத் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 5 பேரின் நிலை கவலைக்கிடம் என தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்