இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 20 April 2025 7:34 PM IST
கடலூர் சிப்காட் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 20 பேர் காயம்
காஞ்சிபுரத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கும்பகோணம் திரும்பியபோது விபத்து
சாலை நடுவில் இருக்கும் பூ செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்து
காஞ்சிபுரத்தை சேர்ந்த 20 பேர் காயமடைந்து, கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
- 20 April 2025 7:04 PM IST
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்
- 20 April 2025 6:33 PM IST
- தனியார் வங்கி பெயரில் போலி லிங்க் அனுப்பி, 4 பேரிடம் ரூ.80 ஆயிரம் மோசடி
- மோசடி கும்பலை தேடி வரும் சைபர் கிரைம் போலீசார்
- வாட்ஸ்-அப்பில் வங்கிகள் பெயரில் வரும் போலி லிங்கை தொட வேண்டாம் என எச்சரிக்கை
- 20 April 2025 6:15 PM IST
கவர்னர் 'போஸ்ட்மேன்' என்றால் ராஜ்பவன் படிகளை ஏன் மிதித்தீர்கள் - தமிழிசை கேள்வி
இந்நிலையில் கோடம்பாக்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ”தமிழ்நாடு கவர்னரை போஸ்ட் மேன் என கூறுகின்றனர். பின்னர் எதிர்கட்சியாக இருக்கும் போது எதற்காக கோரிக்கைகளை கொடுக்க ராஜ்பவன் படிகளை மிதித்தீர்கள்.. அவர்களுக்கு எதிர்கட்சியாக இருக்கும்போது கவர்னர் வேண்டும், ஆளும் கட்சியாக இருக்கும் போது கவர்வர் வேண்டாம். அந்தந்த பதவிக்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
- 20 April 2025 6:14 PM IST
7 மாத விண்வெளி ஆய்வுக்கு பின் பத்திரமாக பூமிக்கு திரும்பிய ரஷிய வீரர்கள்
ரஷ்யாவின் சோயுஸ் எம்.எஸ்.26 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற 3 பேர் கொண்ட விண்வெளி வீரர்கள் குழு பூமிக்கு பத்திரமாக திரும்பியது.
ரஷ்ய விண்வெளி வீரர்கள் அலெக்ஸி ஒவ்சினின், இவான் வாக்னர் மற்றும் நாசாவின் மூத்த விஞ்ஞானி டொனால்ட் பெடிட் ஆகியோர் கஜகஸ்தானில் தரையிறங்கினர்.
- 20 April 2025 5:21 PM IST
துரை வைகோ - மல்லை சத்யா சமரசம்: வைகோ கூறியது என்ன..?
செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “நிர்வாகக் குழு கூட்டத்தில் எல்லோரும் தங்கள் கருத்துகளை கூறினார்கள்.
துரை வைகோவும், மல்லை சத்யாவும் மனம் திறந்து பேசினார்கள். மதிமுகவுக்கும், துரை வைகோவுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று மல்லை சத்யா கூறினார். இனி இதுபோன்ற சூழலுக்கு இடம் கொடுக்க போவதில்லை என மல்லை சத்யா உறுதி அளித்துள்ளார்” என்று கூறினார்.
- 20 April 2025 4:48 PM IST
துரை வைகோவிடம் மன்னிப்பு கேட்ட மல்லை சத்யா
மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் துரை வைகோவிடம் மல்லை சத்யா மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் மனதை காயப்படுத்தும் வகையில், என் நடவடிக்கை இருந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று துரை வைகோவிடம் மல்லை சத்யா கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 20 April 2025 4:47 PM IST
சுப்ரீம்கோர்ட்டு குறித்து சர்ச்சை கருத்து: நிஷிகாந்த் துபேவுக்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலடி
ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
சுப்ரீம்கோர்ட்டு மற்றும் நீதிபதிகளை விமர்சித்து பா.ஜ.க.வை சேர்ந்த 2 எம்.பி-க்கள் கருத்து கூறினர். அதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என அக்கட்சியின் தலைவர் நட்டா கூறியுள்ளார். வெறுப்பு பேச்சு என்று எடுத்துக் கொண்டால் இந்த இரண்டு எம்.பி-க்கள் தொடர்ந்து இழிவாக பேசி வருகின்றனர். சமூகம், நிறுவனம் மற்றும் தனிநபர்கள் என அனைத்தையும் இவர்கள் இருவரும் இகழ்ந்து பேசி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து நட்டாவின் கருத்து வெறும் டேமேஜ் கன்ட்ரோல் தான்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 20 April 2025 4:00 PM IST
விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். பைன் காடுகள், குணா குகை, மோயர் சதுக்கம் பகுதியில் கூட்டம் அலைமோதுகிறது.