இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-12-2025

Update:2025-12-20 08:59 IST
Live Updates - Page 4
2025-12-20 03:42 GMT

சென்னை மாநகராட்சியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும், நாளையும் சிறப்பு முகாம் 


வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-12-20 03:35 GMT

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு 


டி20 உலகக் கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி மும்பையில் இன்று அறிவிக்கப்படுகிறது. இதையொட்டி தேர்வு குழு தலைவர் அஜீத் அகர்கர் தலைமையிலான கமிட்டியினர் ஆலோசிக்கிறார்கள். தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் சூர்யகுமார் யாதவும் அணித் தேர்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025-12-20 03:34 GMT

ராசிபலன் (20-12-2025): நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி தரும் நாள்..! 


ரிஷபம்

இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

Tags:    

மேலும் செய்திகள்