இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-05-2025

Update:2025-05-22 09:16 IST
Live Updates - Page 3
2025-05-22 07:52 GMT

கோவை விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாககோவை வந்த பயணியிடம் ரூ.5 கோடி மதிப்பிலான 5.25 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2025-05-22 07:26 GMT

சென்னை திருவான்மியூர் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

2025-05-22 07:11 GMT

ரூ.80 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட சென்னை வள்ளுவர் கோட்டம், முதல்-அமைச்சரால் விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது. 1400 பேர் அமரும் வகையில் ஏசி கூட்ட அரங்கு, உணவுக்கூடம், ஒலி ஒளி காட்சிக்கூடம், குறள் மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

2025-05-22 07:09 GMT

நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பரந்தாலுமூடு என்ற பகுதியில் சாலையோர மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக மரம் விழும் நேரத்தில் வாகனங்கள் செல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

2025-05-22 06:54 GMT

நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரெயில் நிலையங்களை திறந்துவைத்தார் பிரதமர் மோடி.

2025-05-22 06:27 GMT

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு ஊழல் நடைபெற்று உள்ளது என அமலாக்க துறை தெரிவித்து உள்ளது. இந்நிலையில், அமலாக்க துறை விசாரணைக்கு தடை விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ள சுப்ரீம் கோர்ட்டு கோடை விடுமுறைக்கு பின்னர் விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்க துறை எல்லை மீறியுள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

2025-05-22 06:07 GMT

பிரதமர் மோடி கர்ணி மாதா கோவிலுக்கு இன்று காலை 10.30 மணியளவில் வருகை தந்துள்ளார். அவருடன் ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன் லால் சர்மாவும் சென்றார். கோவிலில் சிறப்பு ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் மோடியின் வருகையால் நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, அவரை கவுரவிக்கும் வகையில் கோவிலில் சிறப்பு சடங்குகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இதனை தொடர்ந்து, சாலை வழியாக 8 கி.மீ. தொலைவு பயணம் செய்து பலானா கிராமத்திற்கு சென்றடைகிறார். அவர் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதனை காண 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இருக்கை வசதிகள் மற்றும் பெரிய பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

2025-05-22 06:02 GMT

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-05-22 05:20 GMT

தஞ்சாவூர் அருகே அரசு பஸ் - வேன் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சார்லஸ் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து விட்டார். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2025-05-22 05:18 GMT

ரெயிலில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம்

புதுவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் அதிவிரைவு ரெயிலில் கடத்தப்பட்ட ஹவாலா பணத்தை எழும்பூர் ரெயில் நிலையத்தில் வைத்து பிடித்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள்.

Tags:    

மேலும் செய்திகள்