இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-09-2025

Update:2025-09-23 09:16 IST
Live Updates - Page 5
2025-09-23 04:50 GMT

மத்திய பிரதேசம்: 3 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி; 12 பேர் காயம்


மத்திய பிரதேசத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், பஹீம் மற்றும் அலீபா (வயது 20) ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

2025-09-23 04:48 GMT

“100 ஆண்டுகளை கடந்தும் திமுக நிலைத்து இருக்கும்”: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

மெய்சிலிர்த்து நிற்கிறேன்… விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாட்டைச் சேர்ந்த ஓவியர் T.R.கோவிந்தராஜன் அவர்கள் எழுதிய கடிதமும் ஓவியப் புத்தகமும் நேற்று வந்தடைந்தது.

அவருக்கு வயது 87-ஆம்!.. அவரது எழுத்தில் வெளிப்படும் கழகப் பற்றைக் காணுங்கள்… தமிழ் மண்ணில் தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-09-23 04:40 GMT

ஜி.எஸ்.டி. குறைப்பின் பலன் நுகர்வோரை சென்றடைவது கேள்விக்குறி; காங்கிரஸ் கருத்து


ஜி.எஸ்.டி. குறைப்பின் பலன் மக்களை சென்றடையுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

2025-09-23 04:33 GMT

பாலஸ்தீனியர்களுக்கு நாடு என்பது உரிமை சார்ந்தது: ஐ.நா. அமைப்பு


2 நாடுகள் இன்றி, மத்திய கிழக்கில் அமைதி என்பது ஏற்படாது என்று ஐ.நா. பொது செயலாளர் கூறினார்.


2025-09-23 04:27 GMT

வரி விதிப்புக்குப்பின் முதல் முறையாக.. அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு


இந்தியா மீதான வரி விதிப்புக்குப்பின் முதல் முறையாக அமெரிக்க வெளியுறவு மந்திரியை, ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.


2025-09-23 04:24 GMT

தாறுமாறாக உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.84 ஆயிரமாக அதிகரிப்பு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்


இன்றும் தங்கம் விலை அதிகரித்து உச்சத்தை எட்டியுள்ளது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.70-ம். சவரனுக்கு ரூ.560-ம் விலை அதிகரித்து. ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்து 500-ம், சவரன் ரூ.84 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை தினம், தினம் உச்சத்தை தொட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


2025-09-23 04:21 GMT

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இன்று மோதல்


சூப்பர் 4 சுற்றில் இதுவரை 2 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடக்கும் சூப்பர் 3வது ஆட்டத்தில் இலங்கை -பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளன.

2025-09-23 04:19 GMT

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள். கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.


2025-09-23 04:14 GMT

பாலிவுட்டில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்...?

பிரபல பாலிவுட் இயக்குனர் பர்ஹான் அக்தரின் ''டான் 3'' படத்தில் ரன்வீர் சிங்குக்கு வில்லனாக நடிக்க நடிகர் அர்ஜுன் தாஸுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

2025-09-23 04:13 GMT

டெல்லியில் இன்று நடக்கும் 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா


விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்க உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்