சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு
2026 முதல் சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்த தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்ட தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதமும், இரண்டாம் கட்ட முடிவுகள் ஜூன் மாதமும் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு
2026 முதல் சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்த தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்ட தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதமும், இரண்டாம் கட்ட முடிவுகள் ஜூன் மாதமும் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை
இஸ்ரேல் - ஈரான் இடையிலான போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்ததற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். குடியரசுக் கட்சி எம்.பி. பட்டி கார்ட்டர், நோபல் குழுவிற்கு கடிதம் மூலம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சில தினங்களுக்கு முன்புதான் தனக்கெல்லாம் நோபல் பரிசு வழங்கப்படாது என டிரம்ப் ஆதங்கப்பட்டிருந்தார்.
நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணை
நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த கிருஷ்ணாவை தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
எரிமலையில் ஏறும்போது பள்ளத்தில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
இந்தோனேசியாவின் எரிமலையில் ஏறும்போது பள்ளத்தில் தவறி விழுந்த பிரேசில் நாட்டு சுற்றுலாப் பயணி ஜூலியானா மரின்ஸ் (26) உயிரிழந்தார். குழுவாக மலையேற்றத்தில் ஈடுபட்டபோது தவறி விழுந்துள்ளார். டிரோன் மூலம் அவரது உடலை கண்டறிந்து மீட்டுள்ளனர்.
ஹாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகை வரலட்சுமி
இயக்குநர் சந்திரன் ருட்னம் இயக்கத்தில், பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸின் 'RIZANA A Caged Bird' ( ரிஷானா ஏ கேஜ்டு பேர்டு) படம் மூலம் நடிகை வரலட்சுமி ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். ஜெர்மி ஐயன்ஸ் படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாவது, கனவு நனவான தருணம் என வரலட்சுமி உருக்கமாக கூறியுள்ளார்.
வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு
வயநாட்டில் பெய்த கனமழையால் சுரல்மலாவின் மேப்பாடி, முண்டகையில் மீண்டும் நிலச்சரிவு மற்றும் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெய்லி பாலம் அருகே வெள்ளம் பாயும் நிலையில், அப்பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
வேலூரில் அரசு பல்நோக்கு உயர் மருத்துவமனையை முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
ஈரானின் அணு உலைகள் தொடர்ந்து செயல்படும் வகையில் நன்றாகவே உள்ளன என்றும் செறிவூட்டப்பட்ட யுரேனிய பொருட்கள் முன்பே பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டன என்றும், அமெரிக்காவின் சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரானில் நடந்த ராணுவ தாக்குதல் வெற்றி என டிரம்ப் கூறி வந்த சூழலில், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அணு உலைகள் அழியவில்லை. அவை பாதுகாப்பாக உள்ளன என்று அமெரிக்காவில் இருந்து வெளிவரும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு உள்ள தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், டிரம்ப் ஆத்திரமடைந்துள்ளார். இது பொய்யான செய்தி என கூறியுள்ளார். அமெரிக்க வரலாற்றில் வெற்றியடைந்த ராணுவ தாக்குதல்களில் இதுவும் ஒன்று. இதனை குறைத்து மதிப்பீடு செய்யும் வகையில் சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனங்கள் இணைந்து முயற்சித்து உள்ளன.
ஈரானின் அணு உலைகள் முற்றிலும் அழிந்து விட்டன. சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் ஆகிய இரு பத்திரிகைகளும் பொதுமக்களால் கடுமையாக சாடப்பட்டு வருகின்றன என தெரிவித்து உள்ளார்.
ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் திட்டமிட்டபடி இன்று புறப்பட்டது
ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் திட்டமிட்டபடி இன்று மதியம் 12.01 மணியளவில் புறப்பட்டது. ராக்கெட்டில் இருந்து வளிமண்டலத்திற்கு அப்பால் சென்றதும் டிராகன் விண்கலம் பிரிந்து விடும். இதன்பின்னர், விண்வெளியை அடைந்ததும், பூமியை சுற்றி வரும். டிராகன் விண்கலம் நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைகிறது.