இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-02-26 10:44 IST


Live Updates
2025-02-26 13:59 GMT

கோவை ஈஷா யோகா மையத்தில் பிரமாண்ட நாகர் சிலைக்கு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தீபாராதனை காட்டி வழிபட்டார்.

2025-02-26 13:10 GMT

ஆந்திர பிரதேசத்தில் சிவராத்திரியை முன்னிட்டு ஆற்றில் குளிக்க சென்றபோது, நீரில் மூழ்கி 5 இளைஞர்கள் பலியாகி உள்ளனர்.

2025-02-26 12:05 GMT

தென்காசிக்கு உட்பட்ட புளியங்குடியில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோவும், பஸ்சும் இன்று நேருக்கு நேராக மோதி விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் ஆட்டோவில் இருந்த 5 குழந்தைகள் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் புளியங்குடியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2025-02-26 11:29 GMT

1967, 1977 போல் மீண்டும் ஒரு புரட்சி தமிழகத்தில் வரும் என்று விஜய் பேசியது குறித்த கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதிலில், தம்பியினுடைய நம்பிக்கை வெற்றியடைய நான் வாழ்த்துகிறேன் என்றார்.

2025-02-26 11:08 GMT

ஐபிஎல் தொடருக்கு தயாராக சென்னை வந்தடைந்தார் கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி.

2025-02-26 11:06 GMT

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: தடையில்லா சான்று வழங்கியது இந்திய விமான நிலைய ஆணையம். கிரிக்கெட் மைதானத்திற்கான வடிவமைப்பை ஒரு வாரத்தில் இறுதி செய்ய விளையாட்டு துறை முடிவு செய்துள்ளது. 

2025-02-26 10:30 GMT

கடனை முழுமையாக செலுத்தியும் விற்பனை பத்திரத்தை, வங்கி கொடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர் தொடர்ந்த வழக்கில், வங்கி சார்பில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

2025-02-26 10:21 GMT

கோவை பீளமேட்டில் இன்று காலை பா.ஜ.க.வின் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் ஒரு எம்.பி. சீட் கூட குறையாது. விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் என்றார். தென்னிந்திய மக்களுக்கு கூடுதல் தொகுதிதான் கிடைக்கும். தொகுதி குறைய வாய்ப்பு இல்லை என கூறினார்.

இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த விவகாரம் பற்றி பேசுவதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுபற்றி பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மத்திய மந்திரி அமித்ஷா தெளிவாக தெரிவித்து விட்டார். அதனால், மார்ச் 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த என்ன தேவை உள்ளது? என கேள்வி எழுப்பி உள்ளார்.

2025-02-26 09:23 GMT

நாமக்கல்லில் ராசிபுரம் அருகே அரசு பள்ளியில் கழிவறையில் மாணவன் மர்ம மரணம் அடைந்து கிடந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

2025-02-26 08:55 GMT

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கி, நேரக்கட்டுப்பாடு விதித்தது ஏன்? என கேள்வி எழுப்பிய சென்னை ஐகோர்ட்டு, இதுபற்றி 2 வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்