இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025

Update:2025-03-26 09:04 IST
Live Updates - Page 3
2025-03-26 08:48 GMT

திருச்செந்தூர் திருப்பதிக்கு இணையாக மாறும் - சேகர்பாபு

திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பின் திருப்பதிக்கு இணையாக மாறும். தமிழகத்தில் 2 கோவில்களில் இருந்த அன்னதான திட்டத்தை 17 கோவில்களுக்கு விரிவுபடுத்தி ஆண்டுக்கு 3.5 கோடி பக்தர்களுக்கு இறைபசியை மட்டும் அல்லாமல், வயிற்றுப்பசியும் போக்கும் அரசு திமுக அரசு என்று சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்சேகர்பாபு கூறினார். 

2025-03-26 08:43 GMT

2020ம் ஆண்டில் சாத்தன்குளம் தந்தை - மகன் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில், சிறையில் உள்ள முன்னாள் எஸ்.ஐ. ரகு கணேசனின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணையை 2 மாதங்களில் முடிக்கவும் கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

2025-03-26 08:20 GMT

தமிழக அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 9.30 இலட்சம் அரசு ஊழியர்கள்/ஆசிரியர்கள், 7.05 இலட்சம் ஓய்வூதியர்கள்/குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது மார்ச் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் /குடும்ப ஓய்வூதியம் ஆகியவை இவ்வாண்டு ஏப்ரல் 1 அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் 02.04.2025 வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

2025-03-26 07:32 GMT

மனோஜ் ஓடி வந்து என்ன கட்டிப்புடிக்கிறது என் கண்ணுக்குள்ளயே இருக்கு என்று மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குநர் பி.வாசு உருக்கமாக கூறினார்.

2025-03-26 07:29 GMT

நடிகர் மனோஜின் உடலுக்கு நடிகர்கள் கவுண்டமணி, சரத்குமார், விதார்த், நாசர், இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

2025-03-26 07:12 GMT

டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணக் கட்டுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.

2025-03-26 06:48 GMT

மனோஜ் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பாரதிராஜாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். 

2025-03-26 06:21 GMT

பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சைக்குரிய அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பிற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

2025-03-26 06:03 GMT

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசைன் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மகன் மதுரை ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு கொலை வழக்கின் விசாரணை நிலையை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு, 8 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

2025-03-26 06:01 GMT

என் தம்பி கருப்பசாமி பாண்டியன் உருவம்தான் கருப்பு. உள்ளமோ வெள்ளை என்று மக்கள் திலகத்தால் பாராட்டிப்போற்றப்பட்டவர் என்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்