ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2-ல் அறிவிப்பு
அண்ணா பல்கலை.மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகி உள்ளது. ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்று மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி கூறினார். சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி ஜூன் 2-ல் தண்டனை விவரங்களை அறிவிக்க உள்ளார். ஜூன் 2-ம் தேதி தண்டனை விவரம் வெளியாகும் வரை நீதிமன்றக்காவல் நீட்டிப்பு என உத்தரவு வெளியாகி உள்ளது.
மாநிலங்களவை எம்.பி.,ஆகிறார் கமல்ஹாசன்; 4 பேர் பட்டியலை திமுக வெளியிட்டது
மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.திமுக வேட்பாளர்களாக 3 இடங்களுக்கு பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் போட்டியிட உள்ளனர் மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சனுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. திமுக அணியில் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி.,ஆகிறார்.
இன்று சவரனுக்கு ரூ. 480 குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.71,480க்கு விற்பனையாகிறது ஒரு சவரன் ரூ.71,480க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.8,935 விற்பனையாகிறது. இன்று சவரனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது.
ஐபிஎல்: நாளை முதல் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நாளை(மே29) முதல் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளது. முதலாவது தகுதி சுற்றில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நாளை மறுதினம் வெளியேற்றுதல் சுற்று போட்டி: மும்பை - குஜராத் அணிகள் மோதுகிறது. ஜூன் 1 இல் அகமதாபாத்தில் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டம் நடைபெற உள்ளது. ஜூன் 3 இல் நடப்பு சீசனின் சாம்பியன் யார் என தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 4ஆம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் இன்று (மே 28) நிறைவடைகிறது
குலாம் நபி ஆசாதுக்கு திடீர் உடல்நலக்குறைவு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் குழுவுடன் சவுதி அரேபியா சென்ற குலாம் நபி ஆசாதுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வெப்ப அலையால் ஏற்பட்ட பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை சீராக உள்ளது.
55 வயதில் எவரெஸ்டில் ஏறி சாதனை
31வது முறையாக உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் ஏறி, அதிக முறை எவரெஸ்டில் ஏறியவர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார் நேபாளத்தைச் சேர்ந்த காமி ரீட்டா (55) எவரெஸ்ட்டில் ஏறுபவர்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகிறார் காமி.
இரு மொழி கொள்கையே பின்பற்றப்படும் - மராட்டிய அரசு அறிவிப்பு
மாநிலத்தில் மராத்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழி கொள்கையே பின்பற்றப்படும் என்று மராட்டிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.முன்னதாக 1 ஆம் வகுப்பு முதல் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
வலுப்பெற்றது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.