இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025

Update:2025-08-28 09:12 IST
Live Updates - Page 6
2025-08-28 04:35 GMT

பயனர்களுக்கு வேற லெவல் அப்டேட் கொடுத்த இன்ஸ்டாகிராம்


இன்ஸ்டாகிராமில் லிங் ரீல் என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்துள்ளது மெட்டா நிறுவனம். இந்த புதிய வசதி மூலம் போஸ்ட் செய்யப்படும் ரீல்ஸ்களுக்கு அடுத்து எந்த ரீல்ஸ் வர வேண்டும் என்பதை செட் செய்ய முடியும். ரீல்ஸ்களை முழு தொடராக பார்க்கும் வகையில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்த ரீல்ஸ்க்கு அடுத்து எந்த ரீல்ஸ் இடம் பெற வேண்டும் என்பதை ரீல்ஸ் அப்லோடு செய்பவர்களே முடிவு செய்து கொள்ள முடியும்.


2025-08-28 04:32 GMT

சத்தீஸ்கரில் பெய்த கனமழை: வெள்ளத்தில் சிக்கிய தமிழர்.. குடும்பத்துடன் பலியான சோகம்


சத்தீஸ்கரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு பஸ்தார், பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இதனைத்தொடர்ந்து பல நதிகள் நிரம்பி வழிந்து. தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து அங்கு பாதிக்கப்பட்டுள்ளது.


2025-08-28 04:31 GMT

2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதி: தோனி அதை செய்யாதது ஆச்சரியமாக இருந்தது - பெர்குசன்


அந்த ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் தோனி அதிரடியாக விளையாடாதது தனக்கு ஆச்சரியமாக இருந்ததாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் கூறியுள்ளார்.


2025-08-28 04:29 GMT

நாளை திருமணம்: பைக்கில் சென்ற புதுமாப்பிள்ளைக்கு எமனாக வந்த லாரி


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி பாளையம் பகுதியை சேர்ந்தவர் குழந்தைபையன். இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 27). இவர் பொக்லைன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். மேலும் இரும்பு கடையும் நடத்தி வந்தார். இவருக்கு நாளை (வெள்ளிக்கிழமை) திருமணம் நடக்க இருந்தது.


2025-08-28 04:25 GMT

மேலும் அதிகரித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15-ம், சவரனுக்கு ரூ.120-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 405-க் கும், ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.130-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

2025-08-28 04:05 GMT

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன்படி 7 முதல் 11 செமீ வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இன்றும் (28-8-2025). நாளையும் (29-08-2025) மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது

2025-08-28 03:57 GMT

ரஷியாவில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு; வாகன ஓட்டிகள் தவிப்பு


ரஷியா மீது உக்ரைன் ராணுவத்தினர் அதிநவீன ஆளில்லா விமானங்களை ஏவி தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக ரஷியாவின் எண்ணெய் கிணறுகள், சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளை குறிவைத்து இந்த பொருளாதர சீர்குலைவு தாக்குதல் நடத்தப்படுகிறது.


2025-08-28 03:56 GMT

எல்லையில் ஊடுருவல் முயற்சி: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள அசல் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி நடைபெறுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து குறிப்பிட்ட இடத்தை பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது, பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை கண்டறிந்தனர்.


2025-08-28 03:54 GMT

சேப்பாக்கத்தின் சிங்கம் - அஸ்வினுக்கு சிஎஸ்கே நெகிழ்ச்சி வாழ்த்து


ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் நெகிழ்ச்சி வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.


2025-08-28 03:53 GMT

தமிழ்நாட்டில் ஒரு லட்சம் மக்களுக்கு 194 டாக்டர்கள் - வெளியான தகவல்


தமிழ்நாட்டில் ஒரு லட்சம் மக்களுக்கு 194 டாக்டர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களின் பட்டியலில் ஒரு லட்சம் மக்களுக்கு கோவாவில் 298 டாக்டர்களும், கர்நாடகாவில் 207 டாக்டர்களும், கேரளாவில் 203 டாக்டர்களும், ஆந்திராவில் 198 டாக்டர்களும், பஞ்சாப்பில் 173 டாக்டர்களும், மராட்டியத்தில் 164 டாக்டர்களும், டெல்லியில் 148 டாக்டர்களும், ஜம்மு காஷ்மீரில் 137 டாக்டர்களும், குஜராத்தில் 109 டாக்டர்களும், அருணாசலபிரதேசத்தில் 105 டாக்டர்களும் இருக்கின்றனர். மற்ற மாநிலங்களில் ஒரு லட்சம் மக்களுக்கு இரட்டை இலக்கத்தில் டாக்டர்களின் எண்ணிக்கை இருக்கிறது.


Tags:    

மேலும் செய்திகள்