ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கத்திற்கும் வங்கதேசத்திற்கும் இடையே கரையை கடந்தது. மேலும் வலுவிழந்து தாழ்வு மண்டலமாக மாலைக்குள் மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்காளத்தின் வளர்ச்சியே இந்தியாவின் அடித்தளம் - பிரதமர் மோடி
வங்காளத்தின் வளர்ச்சியே இந்திய எதிர்காலத்தின் அடித்தளம், இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதில் வங்காளத்தின் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. எரிவாயு திட்டத்தால் 2.5 லட்சத்திற்கு மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் எரிவாயு கிடைக்கும். நாடு முழுவதும் எரிவாயு வினியோக வலையமைப்பை பாஜக அரசு வலுப்படுத்தி உள்ளது என்றார் பிரதமர் மோடி.
நகைக்கடன் விதி: கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது -அமைச்சர் பெரியகருப்பன்
கூட்டறவுத்துறை kaசென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
நகைக்கடன் குறித்த ஆர்.பி.ஐ விதிகள் தொடக்க வேளாண் வங்கிகளுக்கு பொருந்தாது. ஆர்.பி.ஐ. விதிகளால் கூட்டுறவு வங்கிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.60 ஆயிரம் கோடி நகைக்கடன் தரப்பட்டுள்ளது. நியாயவிலைக்கடைகளில் ஆள் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்றும் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதல்-அமைச்சர் அஞ்சலி
சென்னை ராமாபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
பதவியில் இருந்து முகுந்தன் விலகல்
பாமக இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் விலகுவதாக அறிவித்துள்ளார். சொந்த காரணங்களுக்காக பாமக இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன். எனது குலதெய்வம் ராமதாஸ், எனது எதிர்காலம் அன்புமணி ராமதாஸ் என்று முகுந்தன் கூறியுள்ளார்.
நடிகர் ராஜேஷ் மறைவு - ரஜினிகாந்த் இரங்கல்
நெருங்கிய நண்பர் ராஜேஷ் மரண செய்தி அதிர்ச்சியளிக்கிறது, மிகுந்த மன வேதனையை தருகிறது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 4,927 கனஅடியாக அதிகரிப்பு
சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,070 கன அடியில் இருந்து 4,927 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.18; அடியாக உயர்வு; நீர் இருப்பு 81.544 டி.எம்.சி.யாக உள்ளது.