இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-09-29 08:48 IST


Live Updates
2025-09-29 14:32 GMT

த.வெ.க. தலைவர் விஜயின் பட்டினப்பாக்கம் இல்லத்தில் இருந்து அக்கட்சியின் கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் புறப்பட்டு சென்றனர்.

2025-09-29 14:32 GMT

கரூர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

2025-09-29 13:50 GMT

ஒவ்வொரு கடையின் முன்பும் இந்திய தயாரிப்பு பொருட்கள் குறித்த அறிவிப்பு பலகை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வெளிநாட்டுப் பொருட்களைச் சார்ந்திருப்பது குறையும் போது நாட்டிற்கு நல்லது. வணிகர்கள், பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2025-09-29 13:49 GMT

டெல்லியில் அமைக்கப்பட்ட பாஜகவின் புதிய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். புதிய கட்டிட திறப்பு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

2025-09-29 13:45 GMT

கரூர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக நிர்வாகி சகாயம், தவெகவைச் சேர்ந்த சிவநேசன், சரத்குமார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2025-09-29 13:15 GMT

கர்நாடகாவில் தசராவை முன்னிட்டு பெங்களூரு - மைசூரு இடையிலான அரசு பேருந்துகளில் கட்டணம் ரூ.30 வரை உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2025-09-29 12:46 GMT

கரூரில் விஜய் பரப்புரையின்போது நெரிசலில் சிக்கி காயமடைந்த 110 பேரில் 51 பேர் பூரண குணடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். எஞ்சிய 59 பேரில் 51 பேருக்கு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனையில் 8 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தகவல் தெரிவித்துள்ளார்.

2025-09-29 12:44 GMT

ஆயுத பூஜையான புதன்கிழமை (அக்டோபர் 01) அன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் இயங்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

2025-09-29 12:41 GMT

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜேடியு கட்சி 102 தொகுதிகளிலும், பாஜக 101 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஸ்வானின் எல்.ஜே.பி. 22 தொகுதிகளிலும்,எச்ஏஎம் கட்சி 8 தொகுதிகளிலும், 4 தொகுதிகளில் ஆர்.எல்.எம். கட்சியும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீதம் உள்ள 6 தொகுதிகள் குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை.

2025-09-29 12:32 GMT

கரூரில் நடத்த விபத்தில் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்டோர் உயிரிழந்தது பெருந்துயர் அளிக்கிறது என்று நடிகை ஆன்ட்ரியா கூறியுள்ளார். உறவுகளை இழந்து வாடும் உறவினர்களின் துயரத்தில் பங்கெடுத்து கொள்வதோடு, சிகிச்சை பெற்று வரும் அனைவரும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இயற்கையை வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்