இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025

Update:2025-04-30 09:24 IST
Live Updates - Page 2
2025-04-30 11:07 GMT

பிரதமர் நரேந்திர மோடி ரஷியாவில் மேற்கொள்ளவிருந்த 2 நாள் சுற்றுப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 2-ம் உலகப்போரில் ரஷியா வெற்றி பெற்றதன் கொண்டாட்ட நிகழ்வு மே 9ல் மாஸ்கோவில் நடக்கவிருந்த நிலையில் அதில் பங்கேற்க பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார்.

2025-04-30 10:58 GMT

2025 இளநிலை நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மே 4ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.

2025-04-30 10:56 GMT

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

2025-04-30 10:10 GMT

டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

2025-04-30 09:49 GMT

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.8,57,530 கோடியாக உயர்ந்தது. மார்ச் மத்தியில் இருந்து இந்திய பங்குச்சந்தையில் பங்குகள் விலைகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கின. ரிலையன்ஸ் பங்கு விலையும் உயர்ந்ததால் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பும் ரூ.1,65,563 கோடி அதிகரித்தது.

2025-04-30 09:49 GMT

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை (மே 01) மது கடைகள் அடைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2025-04-30 08:19 GMT

பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றியமைப்பு


தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவுக்கு புதிய அதிகாரிகளை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு தலைவராக முன்னாள் ‘ரா’ தலைவர் அலோக் ஜோஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2025-04-30 08:17 GMT

நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்


நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.


2025-04-30 07:37 GMT

நீதிபதி மகனை தாக்கிய விவகாரம்: நடிகர் தர்ஷனுக்கு எதிரான வழக்கு ரத்து


தர்ஷன் தரப்பிற்கும், தங்கள் தரப்பிற்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதால் தங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நீதிபதியின் மகன் ஆதிச்சூடி மற்றும் அவரது மனைவி லாவண்யா. மாமியார் மகேஸ்வரி தரப்பிலும், நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் தரப்பிலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யபட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், சமரச மனுவை ஏற்று நடிகர் தர்ஷன், அவரது நண்பர் மற்றும் நீதிபதியின் மகன் மற்றும் மனைவி, மாமியார் மீது பதியப்பட்ட இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.


2025-04-30 07:35 GMT

"தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல.." : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல. மாநில உரிமைகளுடனான கூட்டுறவுக் கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தியாகும். அரசியல் சட்ட மாண்பினைக் காக்கும் செயல்பாட்டுடன் இந்தியாவின் பாதுகாவலனாகவும், தமிழ்நாட்டிற்குள் மதவாத அரசியல் தலையெடுக்காமல் தடுக்கும் அரணாகவும் உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் இறுதி வரை உறுதியாக நிற்பேன்" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்