இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-05-2025

Update:2025-05-30 09:11 IST
Live Updates - Page 3
2025-05-30 08:29 GMT

பொருளாளராக நீடிக்கும் திலகபாமா

பாமக பொருளாளராக திலகபாமா நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட தலைவர், பொருளாளரை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. பொதுக்குழுவின் முடிவு தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்பட்டது, சட்ட விதிகளின் படி பொதுக்குழுவிற்கு மட்டுமே அதிகாரம் உண்டு. சின்ன மாற்றத்தை கூட செய்ய முடியாது நான் இருக்கிறேன். நமக்குள் குழப்பம் வேண்டாம், யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம், நிர்வாகிகள் தொடர்வார்கள் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

2025-05-30 08:24 GMT

பாமகவிலிருந்து நிர்வாகிகளை நீக்கவும் நியமிக்கவும் தலைவரான எனக்கே முழு அதிகாரம் உள்ளது. நிறுவனருக்கு அல்ல என்று அன்புமணி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

2025-05-30 08:22 GMT

முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்னை, அண்ணா அறிவாலயத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து, வாழ்த்து பெற்றார். 

2025-05-30 08:16 GMT

சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.கோவை, திருநெல்வேலி, நீலகிரியில் ஒரு சில இடங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தேனி, தென்காசி, கன்னியாகுமரியில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், திண்டுக்கலில் இன்று கனமழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, தென்காசி, கன்னியாகுமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஜூன் 1 முதல் 5 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2025-05-30 08:14 GMT

பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் - பாமக எம்.எல்.ஏ அருள்

நிர்வாகிகள் நீக்கப்பட்டது எனக்கு தெரியாது. பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என ராமதாஸ் கூறினார் என்று பாமக எம்.எல்.ஏ அருள் கூறினார்.

2025-05-30 08:09 GMT

பாமக விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் நீக்கம்

பாமகவின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மயிலம் சிவகுமாரை பொறுப்பில் இருந்து நீக்கினார் ராமதாஸ். அவருக்கு பதிலக புகழேந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2025-05-30 07:19 GMT

திலகபாமாவிடம் இருந்து பாமக பொருளாளர் பதவி பறிப்பு

பாமக பொருளாளராக இருந்த திலகபாமாவிடம் இருந்து கட்சி பொறுப்பை ராமதாஸ் பறித்துள்ளார். அன்புமணி நடத்தும் கூட்டத்தில் திலகபாமா பங்கேற்ற நிலையில் அவரை பதவியிலிருந்து நீக்கினார் ராமதாஸ். பாமகவுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.பாமக மாநில பொருளாளராக சையத் மன்சூரை நியமித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். கட்சி விதிகளின் அடிப்படையில் பொருளாளராக என்னை நியமித்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

2025-05-30 07:18 GMT

தனிமனைகளை வரன்முறைப்படுத்த அனுமதி

அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் விற்கப்பட்ட தனிமனைகளை இணையவழி மூலம் விண்ணப்பித்து வரன்முறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2016 அக்.20ஆம் தேதிக்கு முன்பாக முன்பதிவு செய்யப்பட்ட தனிமனைகளை வரன்முறைப்படுத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

2025-05-30 06:15 GMT

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன்: பாமகவின் அருள்

ராமதாஸும் அன்புமணியும் ஒன்று சேராவிட்டால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்று சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், தனது கோரிக்கை மற்றும் முடிவை தெரிவிக்க ராமதாஸ் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். மிகவும் வேதனைப்படுகிறோம். கஷ்டப்படுகிறோம். மன உளைச்சலிலும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நெருக்கடியிலும் இருக்கிறேன் என பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி கவலை தெரிவித்துள்ளார். அன்புமணி நடத்தும் ஆலோசனைக்கு செல்லாமல் ஜி.கே.மணியும், பாமகவின் அருளும் ராமதாஸ் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்