சென்னை பட்டினப்பாக்கத்தில் ஹெராயின் போதைப் பொருள் விற்பனை செய்த அசாமை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 19 கிராம் ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குன்னூரில் சுற்றுலா தலங்களான லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் பகுதிகளுக்கு மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
துணை பொதுச்செயலாளர் எண்ணிக்கையை உயர்த்தும் திமுக
துணை பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்துகிறது திமுக, இப்போது 5 துணை பொதுச்செயலாளர்கள் உள்ளனர். இளைஞர்கள், பெண்களுக்கு கூடுதல் வாய்ப்பளிக்க திமுக முடிவு செய்துள்ளது. பொதுக்குழு அன்று கட்சியில் முக்கிய பொறுப்புகளில் சில மாற்றங்கள் வர உள்ளது.
மை டியர் யங் லீடர்ஸ் & பேரன்ஸ் .படிக்கும் போது ஸ்ட்ரெஸ் ஆக வேண்டிய அவசியம் இல்ல, நீட் மட்டுமே உலகம் இல்லை, பெற்றோரிடம் ஊழல் இல்லாதவர்களை தேர்வு செய்ய சொல்லுங்க. நீட்டை தாண்டி இந்த உலகம் மிகவும் பெரியது. அதில் நீங்கள் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது - மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பேசினார்.
தங்கம் விலை சவரன் ரூ.200 உயர்ந்தது
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து சவரன் ரூ.71,360க்கு விற்பனை ஆகிறது.ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து கிராம் ரூ.8,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.111க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நகைக்கடன் புதிய விதிகள்-ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை
நகைக்கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு புதிய விதிகளில் இருந்து விலக்களிக்க ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளை ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தலாம் என்றும் மக்கள், பங்குதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தொகுதிவாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தவெக சார்பில் இன்று நடைபெறும் பாராட்டு விழாவிற்கு பெற்றோருடன் மாணவர்கள் வருகை தந்துள்ளனர்.
மாணவர்களுக்கு பாராட்டு விழா நடக்கும் மண்டபத்திற்கு வந்தடைந்தார் விஜய்.
ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது
ஜம்மு காஷ்மீர் பாஸ்குசன் வனப்பகுதியில் லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே 56 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக இதே வனப்பகுதியில் இரு இடங்களில் என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டு 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.