இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...10-01-2025

Update:2025-01-10 08:40 IST
Live Updates - Page 5
2025-01-10 03:14 GMT

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள் என்று துரைமுருகன் கூறினார்.

2025-01-10 03:13 GMT

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டது. கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையை அடுத்து இரு தரப்பினரும் பாடினர். விழாக்களின்போது வடகலை, தென்கலை பிரிவினர் தகராறில் ஈடுபடுவதால் பக்தர்கள் முகம் சுளித்தனர்.

2025-01-10 03:12 GMT

மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, பரமபத வாசல் திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

2025-01-10 03:11 GMT

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்றும், நாளையும் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-01-10 03:10 GMT

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, பரமபத வாசல் திறக்கப்பட்டது. ரத்னாங்கி அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்