தவெக போராட்டம்: வெளி மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட தொண்டர்கள் கைது

சென்னையை சேர்ந்த தவெக தொண்டர்கள் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என போலீசார் நிபந்தனை விதித்துள்ளனர்.;

Update:2025-07-13 08:24 IST

சென்னை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சி தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். விஜய்யும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு 20 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்பதற்காக வேலூர், காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்ட தவெக தொன்டர்களை போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த தவெக தொண்டர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையை காவல்துறை விதித்துள்ள நிலையில், நிபந்தனையை மீறி வெளி மாவட்டத்தில் இருந்து வர இருந்த தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்