2 பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு
2 பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.;
சென்னை,
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் க.ரவி மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சந்திரசேகர் ஆகியோரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில், இருவரின் பதவிக்காலத்தையும் ஆகஸ்ட் 22-ம் தேதியில் இருந்து மேலும் ஓராண்டு காலம் நீட்டித்து கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இரு துணைவேந்தர்களும் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பதவி நீட்டிப்புக்கான ஆணையை பெற்றுக்கொள்ள உள்ளனர்.