ஊட்டியில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்று நடக்கிறது: ஜெகதீப் தன்கர் பங்கேற்பு

ஊட்டி வரும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் முத்தநாடுமந்து பகுதியில் தோடர் இன மக்களை சந்திக்கிறார்.;

Update:2025-04-25 05:15 IST

ஊட்டி,

தமிழக அரசுக்கு போட்டியாக கவர்னர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இதற்காக அவர், இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் காலை 11.15 மணிக்கு ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் தரையிறங்குகிறார். அங்கு அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, அரசு உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர். துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், இன்று மாலை 6 மணிக்கு ஊட்டி அடுத்த முத்தநாடுமந்து பகுதியில் தோடர் இன மக்களை சந்திக்கிறார்.

இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி சாலை மார்க்கமாக நேற்று மாலை 6 மணியளவில் ஊட்டி ராஜ்பவனுக்கு வந்தார். அங்கு அவரை கலெக்டர் லட்சுமி பவ்யா, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்