உயர்கல்வி நிறுவனங்களில் யு.பி.ஐ. பரிவர்த்தனையை உறுதி செய்ய வேண்டும் - யு.ஜி.சி. அறிவுறுத்தல்

மத்திய அரசு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது.;

Update:2025-04-24 21:43 IST

கோப்புப்படம் 

பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) செயலாளர் மணீஷ் ஆர்.ஜோஷி, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டிஜிட்டல் சார்ந்த அறிவாற்றலை சமூகத்தில் அனைவரும் பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், அறிவுசார் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது.

பணப்பரிமாற்றத்தை குறைத்து, அனைத்து உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. தற்போது, நாட்டில் யு.பி.ஐ மூலம் பாதுகாப்பான, விரைவான பணப்பரிமாற்றம் செய்யும் வசதி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

கிராமப்புற மாணவர்கள் கல்வி கட்டணம், தேர்வு கட்டணம், பாடப்புத்தகங்கள் உள்பட பல்வேறு கட்டணங்களை யு.பி.ஐ. மூலம் செலுத்துவதை விரும்புகின்றனர். மேலும், இது அவசியமாகிறது. எனவே, உயர்கல்வி நிறுவனங்கள், கல்வி சார்ந்த பணப்பரிமாற்றங்களை மாணவர்கள் ஆன்லைன் மற்றும் நேரடியாக எளிதில் கையாளும் வகையில், யு.பி.ஐ மற்றும் 'க்யூஆர் கோர்டு' வசதிகளை கல்வி நிறுவன வளாகத்தில் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்