சின்னாளப்பட்டி அருகே பைக் மீது வேன் மோதி விபத்து - 2 பேர் பலி
இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி கலைமகள் காலனி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது தம்பி பழனிச்சாமி. இருவரும் திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி, காந்திகிராமம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மேம்பாலம் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த வேன் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இந்த விளைவாக எதிர்பாராதவிதமாக சாலையில் வந்துகொண்டிருந்த பைக் மீது மோதியது.
இதனால் பைக்கில் வந்த சகோதரர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த கோர விபத்தில் சோதரர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.