வாஞ்சிநாதன் நினைவு நாள் ; நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி

வீரத்தையும் தியாகத்தையும் நினைவுறுத்தும் திருநாள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்;

Update:2025-06-17 09:11 IST

இந்திய சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன். இவர் கடந்த 1911ம் ஆண்டு ஜுன் 17ம் தேதி மணியாச்சி ரெயில் நிலையத்தில் அப்போதைய கலெக்டர் ராபர்ட் ஆஷை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், வாஞ்சிநாதனின் நினைவு நாளையொட்டி அவருக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

பாரதத் தேசத்தை அடிமைப்படுத்தியதோடு, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்ற பெரும் தலைவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து, சித்திரவதை செய்த ஆங்கிலேய கொடுங்கோலர்களின் கொட்டத்தை அடக்க, தனது இருபத்தைந்து வயதிலேயே தேசத்திற்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்த மாவீரர் வாஞ்சிநாதன் அவர்களின் நினைவு நாள் இன்று.

வீரத்தையும் தியாகத்தையும் நினைவுறுத்தும் இத்திருநாளில், வாஞ்சிநாதன் அவர்களின் புகழைப் போற்றுவோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்