ராணிப்பேட்டையில் விஜய் பிரசாரம்; அனுமதி கேட்டு எஸ்.பி. அலுவலகத்தில் தவெக மனு

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.;

Update:2025-09-24 17:42 IST

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கி விட்டன. அதன்படி, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தவெக, நாம் தமிழர், பாமக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டன.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை கடந்த 13ம் தேதி திருச்சியில் இருந்து தொடங்கியுள்ளார். அவர் டிசம்பர் மாதம் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதனிடையே, தவெக தலைவர் விஜய் வரும் 4ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்களை சந்தித்து பிரசாரம் நடத்த உள்ளார்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி வழங்கக்கோரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தவெக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கோரி மாவட்ட எஸ்.பி.யை நேரில் சந்தித்து தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். இந்த மனு குறித்து பரிசீலனை செய்யப்பட்டு எஸ்.பி. அலுவலகம் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்