ரஜினிகாந்தை போன்று விஜய்யும் அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் - நடிகர் எஸ்.வி.சேகர்

கரூரில் 7 மணி நேரம் கடந்து விஜய் வந்தது மாபெரும் தவறு என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.;

Update:2025-10-04 07:17 IST

சென்னை,

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனது வீட்டுக்கு கடந்த 3 நாளில் 5 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீசார் அக்கறையுடன் ஒவ்வொரு முறையும் எங்கள் வீட்டுக்கு வந்து சோதனை செய்தனர். இதற்காக போலீஸ் கமிஷனருக்கு நன்றி தெரிவிக்க வந்துள்ளேன். கரூரில் 7 மணி நேரம் கடந்து விஜய் வந்தது மாபெரும் தவறு. சினிமா நடிகன் பின்னால் செல்லாதீர்கள். சினிமா நடிகன் வெறும் பொம்மை. திரையில் வருவதை பார்த்து ஏன் நம்புகிறீர்கள்.

விஜய்யின் மேக்கப் கரூரில் கலைந்து போய்விட்டது. இதுபோன்ற பிரச்சினைகள் எல்லாம் வரும் என்று தெரிந்துதான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் சப்தம் இல்லாமல் விலகி போய்விட்டார். அவர், ‘பார்ப்பதற்கு தண்ணீர் தெளிவாக இருக்கும். உள்ளே காலை விட்டால்தான் என்ன முதலை இருக்கும்' என்று சொல்லி இருக்கிறார்.

கரூரில் 27 ஆயிரம் பேர் வந்த கூட்டத்தை கட்டுப்படுத்த தெரியாத விஜய், 10 கோடி மக்கள் இருக்கிற தமிழ்நாட்டை கட்டுப்படுத்தி விடுவாரா?. விஜய் எனக்கு விரோதி கிடையாது. விஜய் அவரது தந்தையை மதிக்காமல் புஸ்சி ஆனந்தை மதித்ததால் வந்த கோளாறுதான் இது. கரூர் விவகாரத்தில் விஜய் மீது நடவடிக்கை எடுத்து அவரை இன்னும் பெரிய ஆளாக்குவதற்கு இந்த அரசு முயற்சிக்காது. ரஜினிகாந்தை போன்று விஜய்யும் அரசியல் இருந்து பின்வாங்கி விடுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்