விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வக்குமார் திமுகவில் இணைந்தார்

கலப்பை மக்கள் இயக்கத் தலைவரும், நடிகர் விஜய்யின் மேலாளருமான (புலி படத் தயாரிப்பாளர்) பி.டி.செல்வகுமார் இன்று திமுகவில் இணைந்தார்.;

Update:2025-12-11 11:03 IST

சென்னை,

நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வகுமார். கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருக்கக் கூடிய பிடி செல்வகுமார், சமீப காலமாக விஜய்யை விமர்சித்து பேட்டி அளித்து வந்தார். "விஜய்யுடன் 27 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன்.விஜய் இப்படி மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்து இருப்பதில் என்னுடைய பங்கும் இருக்கிறது என்று கூறினார்.

மேலும்,  விஜய்யைச் சுற்றி நிறைய சகுனிகள் இருக்கிறார்கள். அவர்களை அவர் அடையாளம் காண வேண்டும். நல்லவர்களை விஜய் தன்னுடன் வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் சமீபத்தில் பேசியிருந்தார். இந்த நிலையில்தான், இன்று பி.டி செல்வகுமார், முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்