தூத்துக்குடியில் இருந்து டெல்லி, மும்பை, ஐதராபாத்துக்கு விரைவில் நேரடி விமான சேவை

தூத்துக்குடியில் இருந்து டெல்லி, மும்பை, ஐதராபாத்துக்கு விரைவில் நேரடி விமான சேவை தொடங்க உள்ளது.;

Update:2025-12-11 10:15 IST

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் உள்ள வாகைக்குளம் விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை பாதிப்பால், சென்னை செல்லும் விமானம் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு விமான நிறுவனம் கட்டணத் தொகையை திருப்பி வழங்கிவிட்டது.

இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து இரவு நேரங்களிலும் விமானங்கள் இயக்கும் வகையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளது. போதுமான பணியாளர்களும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிறகு இரவு நேரங்களிலும் தூத்துக்குடியில் இருந்து விமான சேவை தொடங்கும். இது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் அனுப், விமான நிலையத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, "தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை, ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களுக்கு விரைவில் நேரடி விமான சேவை தொடங்கப்பட இருக்கிறது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்