விழுப்புரம்: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

நகையை அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2025-10-10 05:51 IST

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அம்மன்குளத்துமேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி கவுசிகா (வயது 27). இவர் நேற்று முன்தினம் மாலை செஞ்சியில் இருந்து அரசு டவுன் பஸ்சில் ஊருக்கு வந்துகொண்டிருந்தார். ஈச்சூர் பஸ் நிறுத்தம் அருகில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது கவுசிகா தனது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை சோதனை செய்தார்.

அப்போது நகை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் இருந்த கூட்டநெரிசலை பயன்படுத்தி கவுசிகா கழுத்தில் அணிந்திருந்த ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகையை யாரோ மர்மநபர் அபேஸ் செய்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கவுசிகா செஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை அபேஸ் செய்த மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்