விழுப்புரம்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2025-05-04 00:36 IST

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த செவலபுரை கிராமத்தை சேர்ந்தவர் கொத்தமல்லி மகன் சின்னராசு(வயது 19). இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மேல்மலையனூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை அங்காளம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் சிறுமியை தான் வேலை செய்யும் செங்கல் சூளைக்கு அழைத்துச்சென்று உல்லாசம் அனுபவித்து வந்தார்.

இதனால் தற்போது அந்த சிறுமி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது பற்றிய தகவல் அறிந்த சமூகநலத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட அந்த செங்கல்சூளைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி திருமண வயதை அடையவில்லை என்பது தெரியவந்தது.

இது குறித்து மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய ஊர்நல அலுவலர், செஞ்சி அனைத்து மகளிர் போலீ்ஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய சின்னராசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்