வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை: இன்று கடைசிநாள்

வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க இன்று கடைசி நாளாகும்.;

Update:2026-01-18 10:21 IST

சென்னை,

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எஸ்.ஐ.ஆர் கணக்கெடுபு பணி கடந்த நவ.4 முதல் டிச.14-ம் தேதி வரை நடைபெற்று வந்த நிலையில், கடந்த டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்​படி, தமிழகத்​தில் 5.43 கோடி வாக்​காளர்​கள் உள்​ளனர். 97.37 லட்​சம் பேர் நீக்​கப்​பட்​டனர். அதில், உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள் உள்பட 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

இதில் இறந்​தவர்​கள் மட்​டும் 26.94 லட்​சம் பேர், முகவரி​யில் இல்​லாதவர்​கள் 66.44 லட்​சம்பேர், ஒன்​றுக்கு மேற்​பட்ட இடங்​களில் வாக்​குரிமை உள்​ளவர்​கள் 3.98 லட்​சம் பேர் நீக்​கப்​பட்​டுள்​ளனர். அதனைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்டவை தொடர்பாக விண்ணப்பிக்க ஜனவரி 18-ம் தேதி வரை தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்திருந்தது.

இந்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்கு விண்ணப்பம் அளிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றன.

முன்னதாக கடந்த டிச.19ம் தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியலின்படி 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், இதுவரை 12.80 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர்கள் அளிக்கும் படிவங்கள் சரிபார்க்கப்பட்டு பிப்.17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்