குலசேகரன்பட்டினத்தில் சூதாடிய 13 பேர் கைது: ரூ.3.67 லட்சம், 5 பைக்குகள் பறிமுதல்

குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கர் தலைமையிலான போலீசார் கல்லாமொழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.;

Update:2026-01-18 08:32 IST

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முகேஷ் அரவிந்த் மற்றும் போலீசார் கடந்த 13ம்தேதி குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லாமொழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களான விநாயகசுந்தர் (வயது 50), தளவாய்(58), சரவணன்(42), இலங்காமணி(46), முத்துராமலிங்கம்(62), ராஜகோபால்(33), கருப்பசாமி(37), பிரபு(44), நடராஜன்(50), இளங்கோ(50), அஜித்குமார்(35), கார்த்திகேயன்(46) மற்றும் சேரன்(58) ஆகிய 13 பேர் சேர்ந்து சட்ட விரோதமாக பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கர் வழக்குபதிவு செய்து மேற்சொன்ன 13 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் ரூ.3 லட்சத்து 67 ஆயிரம் ரொக்கப்பணம், சீட்டுக் கட்டுகள் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு இதுபோன்று சட்ட விரோதமாக பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபவர்கள், பொது இடத்தில் மது அருந்தி பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பர்கள் போன்ற சட்டவிராத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது காவல்துறையினர் தனிக்கவனம் செலுத்தி தீவிர ரோந்து பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்சொன்ன சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்