இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு நாளை மட்டும் அனுமதி
மகரஜோதி உற்சவத்தை முன்னிட்டு இன்று 30,000 பேருக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. நாளை இரவு 11 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். அதன் பின்னர் நடை அடைக்கப்பட உள்ளது.
’வெறுப்பு உங்கள் கண்களை மறைத்தது’ - ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக கங்கனா ரனாவத் கருத்து
ஏ.ஆர்.ரகுமானை விட பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட ஒருவரை சந்தித்ததில்லை என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் 19.01.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக குறிப்பிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தமிழ் அல்லது சமஸ்கிருதம்... உலகின் உயிர்ப்புடன் உள்ள மூத்த மொழி எது? பிரபல பாடலாசிரியர் பதில்
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இலக்கிய திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, நடப்பு ஆண்டிற்கான இலக்கிய திருவிழா, கடந்த 15-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், உலக அளவில் அரசியல், இ. அறிவியல் மற்றும் பிற கலைகளில் சிறந்து விளங்குபவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். இதில், அறிவார்ந்த பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் நடைபெறும்.
அணுசக்தி நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தினேன்: 80-வது முறையாக கூறிய டிரம்ப்
இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றத்தை நிறுத்தினேன் என டிரம்ப் கூறுவது இது 80-வது முறையாகும்.
தொடர் விடுமுறை: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பலரும் ஊட்டி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா வந்தனர். அதன்படி ஊட்டியில் தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
சென்னையில் காற்றின் தரத்தை அறிய 100 டிஜிட்டல் பலகைகள்
100 இடங்களில் காற்றின் தரத்தை அறிவிக்கும் டிஜிட்டல் பலகைகளை வைக்க சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
கெனிசாவுடன் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த நடிகர் ரவி மோகன்
அண்ணாமலையார் கோவிலில் நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா இன்று சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர்.
சின்னசாமி மைதானத்திற்கு கிடைத்தது கிரீன் சிக்னல்...ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சி
ஐபிஎல் 2026 தொடரின் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் நடத்த கர்நாடக அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது.
கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று நடக்கிறது.